பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f

5

6

  • ஊம்!'

"தாயே!...லோகநாயகியே!...கருமாரித் தெய்வமே!’

"கண்கண்ட தெய்வம் கருமாரி, சுமதி!'

சந்தேகம் என்னங்க, அத்தான்?"

உதயகாலப் பூஜைக்கான ஆலயமணி ஒலித்து, ஒலி பரப்பத் தொடங்குகிறது.

முதலிலே இறங்கியவன் சுந்தர்தான். சுசீ, என்ன இரண்டாந் தடவையாகவும் மாப்பிள்ளை வேஷம் போடும் படி செய்து விட்டாயே?’

சுமதியும் இறங்குகிருள்!

செங்கதிர்ச் செல்வன் துயில் கலந்து, கண் விழித்துக் கண் திறக்கும் பொன்வண்ண வேளை அது.

தெய்வத்துள் தெய்வமாம் தேவி கருமாரி அம்மன் அறக்கோலம் தாங்கி, அன்பே வடிவமாகவும் புன்னகையே பிம்பமாகவும் கொலு வீற்றிருக்கின்ருள்...

அம்பிகையின் அருள்மிகு திருச்சந்நிதியின் முன்னிலையில் அமைக்கப்பட்டிருந்த கல்யாண மண்டபம் மணவிழாக் கோலம் ஏந்தித் திகழ்ந்தது.

நாதஸ்வரம் பண்கூட்டிப் பண் இசைக்க ஆரம்பிக்கிறது. கொட்டு மேளம் கொட்டுகிறது. மாப்பிள்ளைக் கோலத்தில் கம்பீரமாக வீற்றிருக்கிருன் சுந்தர். புதிய இளமீசை வெகு எடுப்பாகவும் வெகு ஆண்மை யோடும் விளங்கியது; கல்யாணக்களை, அவன் முகத்திலும் கண்களிலும் இதழ்களிலும் சொல்லிச் சொல்லி வழிந்தது.

'பெண்ணைக் கூப்பிடுங்க; முகர்த்த நேரம் நெருங் கிண்டிருக்கு!’ துருசுப் படுத்துகிருர் சாஸ்திரி.