பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

179


'சுமதி, நீயா பாவி? ஊகூம், ஒரு நாளும் இல்லை; தீ பாவியே இல்லை; நீ பாவியாக ஆகவும் முடியாது!... தெய்வத்துக்குப் பழி ஏது? பாவம்தான் ஏது?...நீ வெறும் சுமதி இல்லை!-என்னேட ஜீவனுக்கு ஜீவனுக வாய்ச்சிட்ட என் இல்லத்தரசி நீ!...அன்பே வடிவான நீ அபலை; மன்னிப் புக்குரிய நிரபராதி நீ'-சுந்தரின் நா தழுதழுத்தது.

"ஆமாங்க; மஹாத்மாவினலே மட்டிலுமே மன்னிக்கப் படக்கூடிய பேதை நான்!”

'சுமதி, நான் மகாத்மா இல்லைதான் மகாத்மாவாக ஆகவும் முடியாதுதான் ஆலுைம், நான் என்னுடைய அன்புச் சுமதியை-ஆருயிர்ச் சுமதியை-என் அருமை மனைவி சுமதியை நான் எப்போதோ மன்னிச்சிட்டேனே?-- செருமினன் சுந்தர்.

சுமதி சுடர் விளக்காணுள்!

"நிஜமாகவே நீங்க என்னை மன்னிச்சிட்டீங்களா ஆத்தான்?...'

"நிஜமாகவே, உன்னை நான் மன்னிச்சிட்டேன், சுமதி

'அப்படீன்னு, நீங்க கதையிலேயும் சினிமாவிலேயும் வரவேண்டிய உதாரணப் புருஷரேதானுங்க, அத்தான்.

"என்ன சொல்கிருய், சுமதி?’ குழப்பத்தின் சிக் கலை அறுத்துக் கொண்டு விடுபட முடியாமல் தவித்தான் சுந்தர் ஒளிப்புனலில் கண்கள் பளபளத்தன.

“உங்க கருணை மகத்தானதென்று சொல்கிறேன் அத்தான்; ஆளுல்...?”

'ஆளுல்..?”

“அந்தக் கருணையைப் பாத்திரம் அறிஞ்சேதான் நீங்க னைக்குப் பிச்சையாகப் போட்டிருக்கீங்களா என் இற உண்மையைத் தான் என்னுலே புரிஞ்சுக்கிட முடியவில் லே அத்தான்!”