பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/26

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

இதுமாதிரி காப்பி பலகாரம் சாப்பிட்ட இனிய பொழுதுகள் நெஞ்சரங்கில் ‘சதிர்’ ஆடின.

‘ஊம்’ கொட்டிக் கேட்டுக்கொண்டான் சுந்தர் அவன் 'பில்லை' எடுக்க, அவள் ‘பர்ஸை’ எடுக்க, கடைசியில், அவன் விழித்துப் பார்த்த பார்வையில், அவள் பெட்டிப்பாம்பாக அடங்கிவிட்டாள்.

வீதிக்கு வந்தால்தான் வெய்யிலின் அருமை தெரிகிறது.

“இனி நாலரை மணிக்குத்தான் என் ராஜாக் கண்ணை நான் பார்க்க முடியும்” என்றாள் சுமதி. சிவப்புக்கள் மூக்குத்தி எடுப்பான நாசிக்கு எடுப்புத்தான்!

“வாஸ்தவந்தான்; அதுவரைக்கும் எப்படிப் பொழுதைக் கொல்றதாம்?”

“நேரே வடக்கு மூணு வீட்டுக்குப்போகலாம். நீங்க கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க; அதுக்குள்ளாற நான் குளியலை முடிச்சுக்கிறேன்; அப்புறம் நான் ஓய்வு கொள்றேன்; நீங்க குளிச்சிடுங்க. மச்சினிப்பொண்ணுக்கும் அக்கா புருஷனுக்கும் மத்தியிலே பேச்சுக்குத்தானா பஞ்சம் வந்திடப்போகுது?—மத்தியானம் பசிச்சா, சாப்பிடலாம். இல்லாட்டி, காசு மிச்சம். நேரே ஆஸ்பத்திரிக்குப் பறந்திடலாமே!”

“பேஷ், பேஷ்” பாராட்டுத் தெரிவித்தான் சுந்தர். “மிஸ்டர் குமார் கொடுத்துவச்சவர்தான்; அதனால் தான் எங்க சுமதியை எடுத்துக்கொள்ளப் போகிறார்!” குமாரைப் பற்றின நல்ல அபிப்பிராயம், புதிய உறவு முறையால் பளிச்சிட்டது; மின்னியது!

இருவரும் திரும்பினர்கள்.

தம்பதியர் தென்படலாயினர்.

சுந்தருக்கு அப்பொழுதே சுசீலாவையும் பேபியையும் பார்க்கவேண்டுபோல இருந்தது.