பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

பழி இது!...குழந்தைக்கு ஆசை கொண்ட மட்டும் அன்பு முத்தங்கள் ஈந்ததும்தான், ஆத்திரம் வடிகால் கண்டது. மீண்டாள். மீண்டதும், ஆச்சியின் நல்வாக்கு கொடிமின்னலாய்க் கிறுக்கியது. அக்கா தன்னிடம் விதியெனப்பொறுப்பு ஒன்றை ஒப்படைத்துவிட்டுத் தெய்வமாகிவிட்ட விதியை அவள் நினைவு கூர்ந்தாள். 'பாவம் குமார்!'--இன்ப நினைவுகளின் அழுத்தத்தில், துன்பக் கண்ணிர் அழுந்தியது. சுயநினைவு அவளை ஆட்கொண்டது. “அத்தான்!” என்று குரல் கொடுத்தாள். பசிக் கிறக்கமும் மனச் சோர்வும் குரல் ஒலியில் தடம் கட்டியிருக்கலாம்.

இப்பொழுதுதான் திரும்பவும் கண்களே மலரத் திறந்து திரும்பினான் சுந்தர். மறுபடி சுமதியை விழுங்கி விடுகிற மாதிரி பார்வை பரப்பலானான். தன் மார்பைத் தடவிக் கொடுத்துக் கொண்டிருந்த சுமதியின் பண்புக் கடமையை உணர்ந்தானோ இல்லையோ, ஒரே எட்டில் அந்தப் பூங்கரங்களே விலக்கி விட்டான்! "சுமதி, என்னை மன்னிச்சிடு; இந்தப் பாவியாலே உனக்குத்தான் ராப்பகலாக எத்தனை கஷ்ட நஷ்டம்?...போதும் போதாதற்கு அந்தக் குழந்தை வேறே!” என்று செருமத் தொடங்கினான்.

விழிகளின் 'நிவேதனத் தீர்த்தம்' நிறைந்தோட, “அத்தான், அப்படியெல்லாம் தயவுசெஞ்சு நினைக்காதீங்க; சொல்லாதீங்க, கையெடுத்துக் கும்பிடுறேனுங்க;உங்களேயோ இல்லை, குழந்தையையோ ஒருசுமை என்பதாக நான் இந்த ஜன்மத்திலே நினைச்சேன்னா, என்னை மாதிரி ஒரு பெரும் பாவி--மன்னிக்கக்கூடாத மகாபாவி இந்தப்பூலோகத்திலே என்னைத் தவிர வேறே ஒருத்தி இருக்கவே முடியாதே?... நீங்க நினைக்கிற மாதிரி நானும் நினைத்தால், அப்புறம், நான் என் அக்கா சுசீ பேரிலே வச்சிருக்கக் கூடிய அந்தப்புனிதமான பக்திக்கு--பாசத்துக்கு--அன்புக்கு என்னங்க அர்த்தம்?...மறுபடியும் சொல்றேன்; அப்படியெல்லாம் நினைக்கக்கூடாதுங்க. சரி, சரி முதலிலே ஒரு வாய் தண்ணிர் குடிங்க; அப்புறம், அரை டபரா பசும்பால் குடியுங்க. துரத்