பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66


புதுநிலவுமாய்-தேடிவந்த சீதேவியாய் காட்சி தந்துக்கிட்டு இருக்காளே உங்க சுசி கண்ணேத் துடைச்சிட்டு, மனசை ஒருநிலைப்படுத்திக்கினு நல்லாப் பாருங்களேன்; நல்லாய்ப் புரியுமே!’

சுந்தர் அவ்வாறே செய்தான்; உண்மைதான் சுமதிப் பெண்னே!...என் சுசீ என்னைப் பிரிஞ்சு-என்னைப் பிரிச்சு எங்கேயும் போய்விட வில்லை! - வாஸ்தவம்தான், சுமதி, வாஸ்தவமேதான்!” இளைய ராஜாவுக்கு முதல் முறையாக முத்தம் கொடுத்தான் சுந்தர். பின்பு, மைத்துணியை ஊடுருவியவாறு, 'சுமதி, நம்ப குமாருக்கு ஒரு தந்தி கொடுக் கிறியா, நான் கொடுத்ததாக!” என்று கூறினன்.

சுமதிக்கு உயிர்க்குலையில் க ல் ல டி பட்டாற் போன்றிருந்தது. 'அக்காவோட சாவுக்கு ஏற்கனவே குமார் வந்தாச்சுங்களே?' என்ருள்.

"அது தெரியும். நீதான் அப்போ தந்தி கொடுத்தியா?”

"நான் எங்கே ஸ்கூல் ஹெட்மிஸ்ட்ரசு’க்குதான் தந்தி கொடுத்தேன்; சேதியைக் கேள்விப்பட்டு குமார் வந்தார்!’

‘'நீ ஏன் மிஸ்டர் குமாருக்குத் தந்தி கொடுக்க வில்லை?”

சுமதி மெளனம் காத்தாள்.

"அது போகட்டும்; குமாரை உடனே புறப்பட்டு வரும்படி இப்போது நீ தந்தி சொல்லிட்டு வா, சுமதி!'

"ஐயோ, அத்தான் என்னை ஏன் இப்படிச் சோதிக் கிறீங்க?... மிஸ்டர் குமாரை நான் மறந்து எத்தனையோ யுகங்கள் ஆகிடுச்சுங்களே, அத்தான்?

பரபரப்பும் பதற்றமும் மேலோங்கிச் சுழித்திட, நீ என்ன சொல்கிருய், சுமதி?’ என்று வினச்சரம் தொடுத் தான் சுந்தர்-நெஞ்சைப் பற்றிக் கொண்டே!