பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85


‘ராஜா கெட்டிதான்; ஆனால், இப்போது அவன் பாட்டி கையிலே என்னமோ ரகசியம் பேசிக்கிட்டு இருக்கான்!...அத்தான், ராஜாவோட அன்புத் தொல்லை தானே என்னுடைய வாழ்க்கை; அதுதானே எனக்கு வாழ்க்கை!...மனசை விணுய் அலட்டிக்கப்படாதுங்க...' படத்தின் கீழிருந்த ஊதுவத்திச் சாம்பல்களைத் தட்டிவிட்டுத் திரும்பினுள் சுமதி.

'சுமதி, சுமதி உன் தங்கக் கையை இப்படிக் கொடேன்,” என்று வேண்டினன் சுந்தர்.

அவள் காரணம் புரியாமல், வெட்கம் சூழ்ந்திட, கையை அத்தான் வசம் நீட்டினுள்.

அந்தக் கையை ஆதரவுடன் பற்றிய சுந்தர், ஊதுவத்திச் சாம்பல் படிந்திருந்த விரலை எடுத்துத் தன் நெற்றிமேட்டில் தேய்த்துக்கொண்டான்; ரோமங்கள் குத்திட்டு நின்றன. சுசீலா தன் கட்டளையைத் தன் கைப்பட எழுதி வைத்திருந்த, கடிதத்தை படத்தடியிலிருந்து எடுத்து வந்து காண்பித்தான்! சுமதி சிலிர்த்தாள். 'அ...த்தா...ன்! இன்னொரு முக்கியமான சமாசாரம். நம் கல்யாணத்துக்குப் பங்குனி எடுப்பிலேயே ஒரு சுபமுகூர்த்த நாளைக் குறிச்சித் தரும்படி அடுத்த தெரு ஜோஸ்யர் ஐயாகிட்டே விவரம் சொல்லி யிருக்கேன்,' என்று செய்தி அறிவித்தாள்.

'உன் இஷ்டம்போலச் செய், சுமதி!'

சுமதி மெய்ம்மறந்தவளாக, ரொம்ப நன்றிங்க அத்தான்!” என்ருள்.

சீ-5