பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104. சியாங் கே-வேடிக் குன்றின் பள்ளத்தாக்கில் அமைந்திருக்கிறது. ஞானிகள் மலைகளின் மேல்தான் அவதரிப்பார்கள் ன்ன்று சீன ஜனங்களிடையே ஒரு கம்பிக்கை உண்டு. ஞானிகள் மலைகளிலே தோன்றிலுைம் தோன்ரு விட்டாலும் மலைகளைத் தேடிப் போய்விடுவது கம் காட்டிலும் வழக்கமா யிருக்கிறது. மலைகளில் தோன்றியவர்கள் எல்லோரும் அறிவாளிகள் என்ப தில்லை. எனினும் சியாங் மலேயிலேயும் தோன்றினர், அறிவாளியாயும் இருங்தார். குடும்பத்தை வைத்துத்தான் சமூகம் அமைக்கப் படுகிறது என்று சீனர்கள் சொல்லுவார்கள். குடும்பத்தின் கெளரவம் எவ்வளவு முக்கியம் என்பது இதிலிருந்தே தெரியும். சியாங் கே-வேடிக்கின் முன்னேர்கள் விவசாயிகள். அவருடைய பாட்டனர், குடியானவரா யிருந்ததோடு, கல்வி கேள்விகளில் சிறந்த அறிஞராயும் இருந்தார். அவருக்குப் பேரனிடத்தில் அளவற்ற அன்பு உண்டு. சியாங்கின் தங்தை ஸ- - ஆன் என்பவர். அவர் பரோபகாரியாயும் நீதிமாயுைம் விளங்கி வந்தார். ஊரில் ஏற்படும் வழக்குகளை எல்லாம் அவரே தீர்த்து வைப்பது வழக்கம். இதல்ை மக்கள் ஏராளமான பொருளே வீணுக்கிப் பகையை வளர்த்துக் கொள்ளாமல் சகிப்புத் தன்மையுடன் ஒற்றுமையாக வாழ முடிந்தது. சாட்சிக்காரன் காலில் விழுவதைக் காட்டிலும் சண்டைக்காரன் காலில் விழுவது நல்லது. இருவர் கால்களிலும் விழாது வழக்கை ஸ்-ஆனிடம் ஒப்படைத்து விடுவது ஜனங்களுக்கு எல்லாவற்றிலும் மேலானதாக இருந்தது. அவர் நடு நிலையில் கின்று கியாயம் சொல்லி வங்த பெருமையை இன்றும் ஜனங்கள் பாராட்டி வருகிருர்கள். சியாங் சிறு வயதிலேயே தாயை இழந்தார். ஒன்பதாவது வயதில் தந்தையையும் இழந்துவிட்டார்.