பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிறப்பும் வளர்ப்பும் 107° களும், அரசாங்கத்தினிட மிருந்து, அதாவது பொது மக்களின் உழைப்பிலிருந்து, பெற்றவை. தேசத்திற்கு என் கடன் பெரிதாகவே உள்ளது...... ‘என்னுடைய உபாத்தியாயர்களுடைய உபதே சங்களும், தோழர்களுடைய உதவியும், கூட்டாளி களுடைய தியாகமும் எனக்கு இப்பொழுது ஞாபகத் திற்கு வருகின்றன. அவைகள், எ ன் கண் முன்பு இப்பொழுது கடப்பவை போல் இருக்கின்றன. பல திறப்பட்ட உணர்ச்சிகளுடன் அவைகளைச் சிந்தித்துப் பார்க்கிறேன். 'இத்தகைய ஆழ்ந்த நினைவுகளின் இடையே தங்தையை இழந்த சிறுவனகிய என்னேப் படிப்பிக் கவும் வளர்க்கவும் எவ்வளவோ சிரமத்தை மேற் கொண்ட என் அன்னையின் மறக்க முடியாத ஞாபகமும் எழுகின்றது. இப்பொழுது அவளுடைய சமாதி அருகேயுள்ள மரங்கள் ஓங்கி உயர்ந்து பருத்து வளர்ந்திருந்த போதிலும், நான் செய்து முடித்த காரியம் எவ்வளவு அற்பமானது என்பதையும், அவள் என்பால் வைத்த நம்பிக்கையின் அளவுக்குத் தக்கபடி நான் கடமை ஆற்றத் தவறிவிட்டேன் என்பதையும் உணர்கிறேன்... - 'அக்தக் காலத்தில் என் குடும்பத்தின் கஷ்டமான கிலேமை வர்ணிக்கும் தர மன்று. என் அன்னேயின் அன்பிலுைம், விடாமுயற்சியாலுமே குடும்பம் அழிந்துவிடாமல் பாதுகாக்கப் பெற்றது. குடும் பத்தை எப்படியாவது பாதுகாத்துவிட வேண்டியது என்று அவள் ஒரே பிடியாகத் தீர்மானித்தாள். அதே உறுதியுடன் குழந்தைகளையும் வளர்த்து வந்தாள். 'அவளுடைய வேலே எளிதாக இல்லை. யாரும் அதைப் பார்த்துப் பொருமைப்படவும் முடியாது. ஏனெனில் அவள் ஒவ்வொரு காரியத்தையும் தானே கவனிக்க வேண்டியிருந்தது. சிறுவனகிய என்னிடம்