பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெற்றியும் தோல்வியும் 141 பேர் உயிர் துறந்து வீழ்ந்தனர். உடனே சென் ஆலோசனையில் ஆழ்ந்தார். சமாதான முறையில் நேரில் பேசி, காவலர்களைக் கைக்குள் போட்டுக் கொண்டு, ஆயுதக் கிடங்கைப் பிடித்துவிட வேண்டும் என்று தீர்மானித்தார். அதற்கு யாரை உள்ளே அனுப்புவது ? தாமே நேரில் போவது என்று கருதி, அந்தச் சுத்த வீரர் தன்னங் தனியே புறப்படலானர். சிங்கத்தின் வாயில் தலேயைக் கொடுப்ப்துபோல், அவர் கிடங்குக்குள் போய்ச் சேர்ந்தார். காவலர்கள் அவருடைய பேச்சைக் கேட்க்வில்லை. அதற்குப் பதிலாக அவரைப் பிடித்து ஒரு காற்காலியில் வைத்துக் கம்பிகளால் நாற்காலி யோடு சேர்த்துக் கட்டிவிட்டார்கள். திரிகரண சுத்தியாகத் தேசத்தின் தன்மையைத் தவிர வேறு சிந்தனேயே அறியாத அந்த மாசிலாமணி, எதிர்பாராத விதத்தில் கட்டுண்டு கிடந்தார். ஆனால், வெளியே இருந்த அவருடைய தோழர்கள் விடவில்லே. இரவு முழுதும் திரும்பத் திரும்பப் போராடிக்கொண்டே இருந்தார்கள். கடைசியில் அவர்கள் வெற்றி யடைந்து, ஆயுதக் கிடங்குள் புகுந்து, தங்கள் அருமைத் தலைவரை விடுதலை செய்துகொண்டு வந்துவிட்டார்கள். ஷாங்காயும் கலகக்காரர் கைக்கு வந்தது. சியாகும் ஷாங்காய் வந்து சேர்ந்தார். ஒரு பட்டாளத்தின் தலைமைப் பதவியை ஏற்றுக் கொண்டார். அந்தக் காலத்தில் புரட்சிக்காக வீரமும் கண்யமும் வாய்ந்த ஜனங்கள் பட்டாளங்களில் சேர முன் வருவதில்லை. ஊர்சுற்றிகளும், சோதாக்களும், போக்கிரிகளுமே கிடைத்து வந்த்ார்கள். இவர்களைப் பயிற்சி செய்வித்து, வல்லமை மிகுந்த மஞ்சு மன்னரின் படைகளே எதிர்க்கவேண்டும் ! சியாங் மனம் தளர வில்லே. இதுவரை அவர் போர் முறைகளைப்பற்றிக் கற்றதெல்லாம் ஏட்டுச் சுரைக்காய்கள். அநுபவத்தில், கேரில், யுத்த முறைகளையும், எதிர்காலத்தில் சீனப்