பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

". முன் வாயில் 7 படமெடுத்துப் பாய்கின்றனர். கோழைகளாகத் தோன்றியவர்கள் வீரர்களாகி வருகிருர்கள். கோடி கோடிக் குரல்களிலிருந்து யுத்த கோஷங்கள் ஒலிக் கின்றன. ஏர் பிடித்த கைகள் சுழல் துப்பாக்கிகளைத் தாங்கி யிருக்கின்றன. குழந்தைகளேத் தாலாட்டிய கைகள் காயம் பட்ட வீரர்களைத் தாலாட்டுகின்றன. சீனவை எங்தப் பகைவரும் இனிச் சாய்த்துவிட முடியாது. ஆணும் பெண்ணுமாகச் சீன அடங் கலுமே போர்க்கோலம் பூண்டு நிற்கிறது ! ஆல்ை...... ஆல்ை......இன்றுள்ள சீனவுக்குப் போதிய யுத்த சாதனங்கள் இல்லை. ரஷ்யா ஆரம்பம் முதல் கொஞ்சம் உதவி செய்து வருகிறது. இங்கி லாந்தும் அமெரிக்காவும் சமீப காலத்தில் சீனுவின் நேசநாடுகளாக இருக்கின்றன. நவீனப் போர்க் கருவிகள் போதிய அளவில் இல்லாவிட்டாலும், சீன மக்கள் உணர்ச்சியும் உறுதியும் கொண்டிருக் கிருர்கள். s "எங்களுக்குத் துப்பாக்கி இல்லை, பீரங்கிகள் இல்லை : எதிரிகள் இவைகளைக் கொணர்ந்து தருவார்கள் !’ என்ற கருத்தமைந்த பாடலே வடமேற்குச் சீனவில் கொரில்லாப் படைகள் தினம் பாடுகின்றன. சீன வுக்கு வேண்டிய ஆயுதக் கிடங்குகள் ஜப்பானில் இருக்கின்றனவாம் ! இது வெறும் பாட்டன்று - ஒவ்: வொரு போர்க்களத்திலும் நடக்கிற விஷயம். சீனர்கள் ஜப்பானியருடைய ஆயுதங்களைப் பிடுங்கி, அவைகளைக் கொண்டே அவர்களை எதிர்க்கிருர்கள் ! 3,150 வருஷங்களுக்கு முன்னல் சீனவின் வட பாகத்தில் 1,400 மைல் நீளமுள்ள ஒரு பெரிய மதில் சீனச் சக்கரவர்த்தியால் கட்டப்பெற்றிருக்கிறது. மலைகளின் மீதும் பள்ளத்தாக்குகளிலுமாக இங்த மதில் மேற்கே யிருந்து கிழக்குக் கடற்கரை வரை பரவியிருக்கிறது. வடபாகத்திலிருந்து சீனவுக்குள்