பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 சியாங் கே-வேடிக் சொன்னர். சென் கலகம் ஒன்றும் ஆரம்பிக்காததால், எலன் அவரை நீக்க இணங்கவில்லை. வடக்கே யுத்தப் பிரபுக்களின் திருவிளையாடல்கள் தடபுடலாக நடந்து வந்தன. சாங் த்ஸோ-வின் என்ற வலிமை மிக்க தளகர்த்தர், 1923, மார்ச் மீ” 3.வட எதிரிகளால் முறியடிக்கப்பட்டு, மஞ்சூரியா சென்ருர். அங்கே போனதும் மஞ்சூரியா சுதந்திர நாடு என்று பிரகடனம் செய்தார். வூ பெய்-பூ நாள் தோறும் தம் வலிமையைப் பெருக்கிக்கொண்டு, லி யுவான்-ஹாங்கைப் பார்லிமென்ட் தலவராக நியமித்தார். கோமின் டாங் அங்கத்தினரில் சிலரும் இதற்கு உடந்தையாக இருந்தனர். வூ பெய்-பூவும் சாங் த்ஸோ-லின் னும் டாக்டர் ஸ்ன்னுடைய விரோதிகள். ஆதிமுதலே அவர்கள் எதிர்க்கட்சியில் இருந்தார்கள். யுவான் காலத்தில் அவர்களுடைய அட்டகாசங்களுக்கு அளவில்லாமல் இருந்தது. அவர்களைப் போலவே, சென் சியுங்-மிங்கும் சமயம் பார்த்துக் கலகத்தை ஆரம்பித்தார். அவருடைய படைகள் கான்டன் நகருக்கு அருகில் இருந்தன. உடனே தென் பார்லிமென்டின் தலைவரான டாக்டர் ஸ்ன்னுடைய தலைமைக் காரியாலயத்தையே தாக்கும் படி சென் தம் படைகளுக்கு உத்தரவிட்டார். எலன்னேயே கொன்று தொலைத்து விடுவதற்காக அவருடைய வாசஸ்தலத்தின் அருகே பீரங்கிப் பிரயோகம் நடந்தது. நல்ல வேளை யாக நண்பர்கள் கட்டாயத்தின் பேரில் ஸன் வெளியேறிப் பகைவர் களேக் கடந்து சென்று ஒரு யுத்தப் படகில் ஏறித் தப்பிக்கொண்டார். அங்கிருங்து படகு வாம்போவா போய் நங்கூரம் பாய்ச்சி நின்றது. ஷாங்காயி லிருந்த சியாங்கே-வுேக்கும் தம் அருமைத் தலைவருடன் வந்து சேர்ந்து கொண்டார். சென் விடுவதாயில்லை. எப்படியாவது ஸன்னேக் கொன்று விடவேண்டும் என்று ஏற்பாடு செய்தார். ஸ்ன்னும்