பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 சியாங் கே-வேடிக் பட்டாலன்றி வேலை செய்வதில்லை என்று தொழி லாளர் அனைவரும் கின்றுவிட்டனர். ஹாங்கோ கான்டன் நகர்களிலும் வேலைநிறுத்தம் ஆரம்ப மாயிற்று. கான்டனில் தொழிலாளர் கூட்டத்தை ஆங்கிலோ-பிரெஞ்சுப் படைகள் ஒரு முறை சுடும்படி நேர்ந்தது. அதனுல் 53 பேர் இறந்தனர்; 117 பேர் காயமடைந்தனர். ஹாங்காங்கிலும் எல்லாத் தொழில் களிலும் வேலேரிறுத்தம் தொடங்கப்பட்டது. அங்கே பெரிய ஆலேத் தொழில்கள் எல்லாம் வெளி நாட்டார் வசமே இருந்தன ; உழைப்பாளர் அனே வரும் சீனர்கள். அவர்கள் செய்த வே8லகிறுத்தம், ஒரு வாரம் இரண்டு வாரத்தோடு கில்லாமல், 15-மாதம் நடைபெற்றது. உலகத்தில் இதுவரை கடந்துள்ள வேலைநிறுத்தங்களில் இதுவே மிக நீண்ட கால அளவுள்ளது. ஷாங்காய்ப் படுகொலைக்கு அதுதாபம் காட்டுவதற்காகக் கான்டனில் நடந்த ஊர்வலத்திலும் பிரிட்டிஷாரும் பிரெஞ்சுக்காரரும் சேர்ந்து சீனரைப் படுகொலை செய்யத் துணிந்ததால், ஹாங்காங் தொழிலாளருக்குக் கோபம் அதிகமாயிற்று. அவர்கள் உடனே உலகம் கண்டிராக ஒர் அற்புத முறையைக் கைக்கொண்டார்கள். ஒரு லட்சம் தொழிலாளர் ஹாங்காங் தீவைவிட்டே வெளியேறிக் கான்டன் பகுதிக்கு வந்துவிட்டனர். கான்டன் சர்க்காரும் அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்துவங்தது. ஜனங்கள் பிரெஞ்சுக்காரர்களை அலட்சியம் செய்து விட்டு, முக்கியமாகப் பிரிட்டிஷாரையே துவேஷித்து வங்தனர். பிரிட்டிஷ் சாமான்களே எல்லாம் பகிஷ்காரம் செய்யவேண்டும் என்று நாடெங்கும் ஓர் இயக்கம் ஆரம்பமாயிற்று. அதளுல் ஆங்கில வர்த்தகம் சீர்குலைந்து போயிற்று ; சீனர்களுக்கும் பெரிய பொருளாதார நஷ்டங்கள் எற்பட்டன. பிரமாதமான வேலைநிறுத்தங்கள் நடைபெற்றதி லிருங்கே சீனவில் கம்யூனிஸ்ட் கட்சி வேருன்றி