பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெற்றி மேல் வெற்றி 173 வழி நெடுகிலும் ஜனங்கள் தேசியப்படைக்கு உதவி செய்து வந்தார்கள். பாதைகள் காட்டுவதிலும், செளகரியங்கள் செய்து கொடுப்பதிலும், எதிரிகளே ஏமாற்றி வழி தவறச் செய்வதிலும் குடியானவர்கள் ஒத்துழைத்து வங்தார்கள். ஆகஸ்ட் 22வட யோசெள பிடிபட்டது. டிங்ஷெகியோ என்ற இடத்திலும் பெரும் போர் கடந்தது. அதிலும் வூ பெய்-பூவின் படைகள் தோல்வியுற்றன. வூ அங்கு வங்ததும் தம்முடைய முக்கியமான ஒன்பது தளகர்த் தர்களேச் சுட்டுத் தள்ளும்படி உத்தரவிட்டார் என்ருல், தோல்வியின் அளவை ஒருவாறு யூகித்துக் கொள்ளலாம். அவர் தம் படைகளுக்குக் கடுமையாக உத்தரவு செய்து மீண்டும் டிங்வுெ கியோவைப் பிடித்துவிட ஏற்பாடு செய்தார். சியாங்கும் விட வில்லை. அங்ககரை மறுபடி பிடித்துக்கொள்ள வேண்டும் என்ருர். வூ பீரங்கிகளையும் யந்திரத் துப்பாக்கிகளையும் பிரயோகிக்க ஏற்பாடு செய்தார். புரட்சிப் படை வீரர்கள் குண்டு மழையால் சம்ஹாரம் செய்யப்பட்டு வந்தனர். போர்முனையில் கின்ற ஒரு தளகர்த்தர், சேதம் அளவற்றதாக இருக்ததால், சிறிது காலம் போரை கிறுத்தி வைக்கலாமா என்று சியாங்கிடம் டெலிபோன் மூலம் கேட்டார். சியாங் மறுத்துவிட்டார். ஆகஸ்ட் 28வ நகரம் புரட்சிப் படையின் வசமாயிற்று. இதற்குப் பின் மீண்டும் வூ முயற்சி செய்து அதைப் பிடித்துக் கொண்டதால், கடைசி முறையாகப் புரட்சிப் படை வீராவேசத் துடன் போர் புரிந்து, பெருங் தியாகங்கள் செய்து, ாகரைக் கைப்பற்றிக் கொண்டது. வூ கட்சியைச் சேர்ந்த 3,000 சிப்பாய்களும் பிடிபட்டனர். இந்தப் போராட்டத்தில் புர்ட்சிப் படைக்கு எராள மான சேதம் ஏற்பட்டபோதிலும், அதனுடைய போர்த் திறமை தேசம் எங்கும் உற்சாகத்தைப் பரப்பியது.