பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1928–1936 191 1-ல் கோமின்டாங்கின் மத்திய கிர்வாகக் கமிட்டியின் கூட்டம் நடைபெற்றது. அதற்கு வாங் சிங்-வேயும் வந்திருந்தார் முதல் நாள் கூட்டத்திற்குப் பின் தலைவர்கள் எல்லோரும் ஒன்ருக அமர்ந்து புகைப் படம் எடுக்க ஏற்பாடு செய்திருந்தார்கள். அங்த கேரத்தில் மிகவும் வருங்கத் தக்க ஒரு சம்பவம் கேர்ங்துவிட்டது. ஒரு வாலிபன் வாங் சிங்-வேயைக் குறிபார்த்துச் சுட்டுவிட்டான். அதல்ை அவருக்குக் காயம் ஏற்பட்டு, சிகிச்சைக்காக அவர் ஐரோப்பா செல்ல தேர்ந்தது. அவரைப் பற்றி இங் நூலில் இடையிடையே குறிப்பிட்டிருப்பது சீனப் புரட்சியில் அவர் பெற்றிருந்த ஸ்தானத்தின் காரணமாகத்தான். அவர் லன் யாட்-லென்னின் தோழர், தீவிரப் புரட்சிக்காரர், மகா தியாகி, சிறந்த அறிவாளி, புரட்சி காரணமாக அவர் நெடுநாள் சிறையில் அடைக்கப் பட்டிருந்தார். வருவடிக் கணக்காக அவருடைய கைகள் முதுகின் புறமாக வைத்துக் கட்டப்பட் டிருங்ததாகவும், புரட்சி வெற்றி பெற்ற பிறகு, ஜயகோஷத்துடன் ஜனங்கள் சென்று அவரை விடுதலை செய்ததாகவும், அவருடைய கைகள் அவிழ்த்து விடப்பட்ட பிறகு நெடுங்காலம் அவைகளை உபயோகிக்க முடியாமல் இருங் கதாகவும் சொல்லப்படுகிறது. அவர் தேசத்திற்காக அரும் பெருங் தியாகங்கள் செய்தவர் என்பதும், அவருக்கு மிகுங்த செல்வாக்கு இருந்தது என்பதும், சியாங் இல்லாதிருங்தால் அவரே தலைமைப் பதவியில் இருங் திருப்பார் என்பதும் உண்மை, மற்றப்படி சியாங்கின் குண விசேஷங்களுக்கும் அவருடைய குணங்களுக்கும் எத்தனையோ வேற்றுமைகள் உண்டு. எக்காரனத் தாலோ இவ் இருவர்களுக்கும் நாளுக்கு நாள் மனக் கசப்பு வளர்ந்து கொண்டே வந்தது. பிற்காலத்தில் ஜப்பான் மேற்கொண்டும் ஆக்கிரமிப்பில் இறங்கி, பெய்ப்பிங், உன்ட்ஸின், வடிாங்காய், நான்கிங்