பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 சியாங் கே-வேடிக் துவேஷித்து வங்தனர் என்பதும் அவருக்குக் தெளிவாயின. அவர் எல்லா விஷயங்களேயும் சியாங் கிடம் விண்ணப்பித்து, ஜப்பானைத் தாக்குவதற்கு உரிய திட்டம் வகுக்கும்படி பன்முறை மன்ருடினர். ஒன்றும் பலிக்கவில்லை. சியாங் வியானுக்கு வந்ததும் மற்றும் பல தளகர்த்தர்களும் அவரைக் கண்டு பேசினர்கள். சியாங் அசையவில்லை. ஜனநாயக காடுகளில் அரசாங்கத் தலைவர் தவருக கடந்துவக்தால் அதைக் கண்டித்து வெளிப் படையாகக் குறை கூறுவது மக்களுக்கு இயல்பாக ஏற்பட்ட உரிமையாகும். ஆனல் சீனுவில் வாக்கு சுதந்திரம் ஏற்படவில்லே. பூர்ணமான ஜனநாயகம் ஏற்படு முன்பு அதற்கு ஏற்றபடி ஜனங்களேப் பயிற்சி செய்யவேண்டும் என்று ஸன் யாட்-ஸென் திட்டம் வகுத் திருந்தார். அப்பொழுது பயிற்சி கடந்து வந்ததால் ஜனங்களின் உரிமைகள் பல கட்டுப் படுத்தப்பட்டிருந்தன. ஆகவே வாலிபத் தளபதியும் அவருடன் சேர்ந்த மற்றத் தளகர்த்தர்களும் தங்கள் அபிப்பிராயத்தை வற்புறுத்த ஒரு புது வழியைக் கண்டுபிடித்தனர். டிஸம்பர் 11வட இரவில் அவர்கள் ஒரு முடிவு செய்தனர். சேனுபதியைச் சிறைப்பிடித்து விடவேண்டும் என்பதே அவர்கள் தீர்மானம். சேபைதியின் உயிருக்கு எவ்வித ஹாணிகம் ஏற்படாம லிருக்கும்படி சாங் கவனித்துக்கொண்டார் சேணு பதியைக் கோண்டுவந்து சேர்க்கும் பொறுப்பை அவர் தம்முடைய மெய்காப்பாளஞன வாலிப வீரன் ஸன் மிங்-சியூ என்பவனிடம் ஒப்படைத்தார். மறுநாள் சனிக்கிழமை காலை 6-மணிக்கு கலகப் படை ஒன்று சேபைதி தங்கியிருக்க ஹோட்டலே வளைந்து கொண்டு சில குண்டுகளேச் சுட்டது. அங்கிருந்த பாதுகாப்பாளர் அதிகமாய் எதிர்க்க வில்லை. சேனபதி அப்பொழுதுதான் தேகப்பயிற்சி