பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 சியாங் கே-வேடிக் விதிக்கப்பட்டது. சேனபதி அதை ரத்துச்செய்து அவரை மன்னித்துவிட்டார். இதன் பின்னர் சியாங் சிறிது காலம் ஒய்வெடுத்துக் கொண்டார். 1987, பெப்ரவரி 15வ முதல் 22வ. வரை கோமின்டாங் சபை நான்கிங் நகரில் கூடித் தேசத்திற்கு முக்கியமான சில தீர்மானங்களைச் செய்தது. அக் கூட்டத்தில் சேனபதி ஸியானில் கடந்த விஷயங்களைக் குறித்து விரிவான ஓர் அறிக்கை சமர்ப்பித்தார். அதில் வாலிபத் தளபதியும் அவ ருடைய நண்பர்களும் வற்புறுத்திய எட்டுப் பிரிவுள்ள திட்டத்தைப் பற்றியும் விளக்கியிருந்தார். சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கிர்வாகக் கமிட்டி தேசிய ஒற்றுமை சம்பங்தமாக அனுப்பியிருந்த தங்தி ஒன்றும் அக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. கம் யூனிஸ்டுகளையும், அவர்கள் செஞ்சேனையையும், மற்ற வடமேற்குப் படைகளையும் மத்திய அரசாங்கத் துடனும் அதன் சேனேயுடனும் ஒன்று சேர்ப்பதற்கு உரிய ஆரம்பத் தீர்மானங்கள் அக்கூட்டத்தில் நிறை வேறின. பின்னல், பிளவுபட்டுக் கிடங்த படைகள் எல்லாம் ஒற்றுமையும் வலிமையும் பெருகும்படி சீர் திருத்தி அமைக்கப்பட்டன. கம்யூனிஸ்ட் கட்சிக்கும் கோமின்டாங்குக்கும் ராஜி ஏற்பட்டது. அகில சீனவும் ஒற்றுமைப்பட்டு, மருந்துக்குக்கூட உள் காட்டுக் கலகம் என்ற பெயரே இல்லாமல் ஒழிந்தது. கம்யூனிஸ்ட் தலைவர்கள் நான்கிங்குச் சென்று சேன பதியுடன் அடிக்கடி கலந்து பேசி வந்தார்கள். வட மேற்கில் சிறை வைக்கப்பட்டிருங்த அரசியல் கைதிகள் எல்லோரும் விடுதலை செய்யப்பட்டனர். மொத்தத்தில் ஜப்பானுக்கு எதிராகச் சீன ஐக்கிய முன்னணி மிகச் சிறப்பாகவும் உறுதியாகவும் அமைந்துவிட்டது. அரசியலிலும் ராணுவக் கொள் கையிலும் எல்லாக் கட்சிகளுக்குள்ளும் கிலேயான