பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/255

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250 சியாங் கே-வேடிக் சீனவில் சட்ட பூர்வமான ஜனகாயக அரசாங் கத்தை விரைவில் அமைக்கவேண்டும். யுத்தம் காரணமாகவும், ஜனங்களுக்கு ஜனாாயகத்தில் பயிற்சி கொடுக்க வேண்டியதற்காகவும் மக்களின் உரிமைகள் பலவும் இதுவரை கட்டுப்படுத்தப் பட்டிருந்தன. இனி உடனே அந்தக் கட்டுப்பாட்டை நீக்க வேண்டும். டாக்டர் ஸன் யாட்-லென் தமது உயிலில் குறித்திருந்தபடி புரட்சியின் லட்சியம் சீனவில் சுதந்திரத்தையும் சமத்துவத்தையும் கிலே காட்டுவது. எனவே அங்காடு எந்த விதத்திலும் அங்கியருடைய ஆதிக்கத்திற்கு உட்படாமல் சுதந்திர மாயிருந்து ஜனநாயக அரசாங்கத்தை அமைக்க வேண்டும்; இதனுல்தான் மற்ற ங்ாடுகளோடு சமத்துவமா யிருக்க முடியும். டாக்டர் அலன் காலமாகி இருபது வருஷங்கள் கழிந்துவிட்டன. இன்னும் பூரண ஜனநாயக அரசாங்கம் ஏற்படாமலிருப்பது பரிதாபமான விஷயமே. கோமின்டாங், கம்யூனிஸ்ட் கட்சி, இதர கட்சிகள், ஒரு கட்சியிலும் சேராதவர்கள் ஆகிய பலதிறப்பட்ட பிரதிநிதிகளும் தேசிய மகா சபையாக ஒன்றுகூடி ஜனநாயக அடிப்படையில் அரசிய லமைப்பைத் தயாரிக்கவேண்டும். எக்காரணத்தை யிட்டும் இனி ஒரு கட்சியின் சர்வாதிகாரம் நடைபெறவேண்டிய அவசியமில்லை. புரட்சிகரமான வகுப்பினர் அனைவரும் அதிகாரம் பெறவேண்டும். ஜப்பானிய ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போரிட்ட சகல கட்சிகளும் எவ்விதத் தடையுமின்றி வேலை செய்ய அநுமதிக்கப்பட வேண்டும். கோமின்டாங் கம் யூனிஸ்ட் கட்சிகள் இரண்டும் ஜனநாயக லட்சியத்தைக் கொண்டவை. கம்யூனிஸ்ட் கட்சி சீனப் புரட்சி இரண்டு படிகளாகவே கிறைவேறும் என்றும், முதற் படியில் ஜனநாயக அரசியலும், இரண்டாவது படியில் அபேதவாத சமூக அமைப்பும்