பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/257

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252 சியாங் கே-வேடிக் அரசாங்கமே உடைமையாகக் கொண்டு கடத்தி வருவதற்கு ஸான் மின் ஜூயி தத்துவங்களின்படி எராளமாக இடமுண்டு. தேசிய மூலதனத்தின் பேரில் ஆதிக்கம் பெறவும், விளை நிலங்களைக் குடியானவர்களுக்குச் சமமாகப் பகிர்ந்து கொடுத்து விவசாயத்தைப் பன்மடங்கு விருத்தி செய்யவும் சீன இன்னும் வெகுதாரம் முன்னேறினால்தான் முடியும். சுருக்கமாய்ச் சொன்னல், இன்னும் பல வருஷங்கள் அல்லும் பகலுமாக உழைத்து வந்தால்தான் சீன புனருத்தாரணமாகி ஜனங்கள் சபிட்சமடைந்து புதிய ஜனநாயகத்தின் பலன்களே நுகரமுடியும். ளுேவில் ஜனநாயகமும் சுதந்திரமும் நிலைபெற்றிருப்பதற்கு உலக சமாதானம் இன்றியமையாத அடிப்படை என்பது சொல்லத் தேவையில்லை. இப்பொழுது முடிந்த யுத்தம் உலக யுத்தம்' என்று தினந்தோறும் பறைசாற்றப்பட்டது. ஆகவே இனிமேல் ஏற்படக் கூடிய சமாதானமும 'உலக சமாதானமாகவே இருக்கவேண்டும். ஒரு வேளை அப்படி ஏற்படாமற் போகுமோ என்று அநேகருக்குச் சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. சந் தேகத்தின் காரணங்களே இந்த அத்தியாயத்தின் தலைப்பில் கொடுத்துள்ள மேற்கோளில் ஆசிரியர் லின் யு-டாங் குறிப்பிட்டிருக்கிருர். குள்ள மனம் படைத்த சில தலைவர்களைப்பற்றி அவர் கூறுகிருர், அவர் முக்கியமாகப் பிரிட்டிஷ் பிரதம மந்திரியா யிருந்த சர்ச்சிலேயே கருதியிருப்பார். சர்ச்சில் பதவியை இழந்ததோடு, அவருடைய பிற்போக்குக் கும்பலும் கவிழ்ந்து விட்டது. பிரிட்டனில் தொழிற்கட்சியின் அரசாங்கம் ஏற்பட்டிருந்த போதிலும், வெளிநாட்டுக் கொள்கைகளில் அது பழைய பிற்போக்காளரான ஏகாதிபத்திய வெறியர் களின் போக்கிலிருந்து எவ்வளவு தூரம் விலகி கடக்கும் என்பது இனிமேல்தான் தெரியவேண்டும்.