பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீனுவும் வல்லரசுகளும் 3/ இந்தியா அடிமைப்பட்ட பிறகு பக்கத்து நாடுகளேப் பற்றிக் கேட்பானேன் ? பின்னர் பத்தொன்பதாம் நாற்ருண்டின் ஆரம்பத்தில் கீழ்த்திசையிலுள்ள நாடு களுக்கு இரண்டே வழிகள்தாம் இருந்தன. ஒன்று, அவை மேல்நாட்டு நாகரிகத்தை ஏற்றுக்கொண்டு, பெரிய யந்திரத் தொழில்களையும் நவீன யுத்த சாதனங்களையும் பெருக்கிக் கொள்ளவேண்டும் ; அல்லது, மேல்நாட்டாருக்கு அடிபணிந்து விட வேண்டும். கீழ் நாடுகளில் மிகச் சிறிதாக இருந்த ஜப்பான் முதல் வழியைக் கைக்கொண்டது. மேல் காட்டு முறைகளைப் பின்பற்றுவதில் அது தன் குரு மார்களேயே வென்றுவிட்டது. சீன, மேல்நாட்டு முறைகளே ஏற்கவும், தன் புராதன நாகரிகத்தைக் கைவிடவும் மறுத்தது. காலநிலை சீனவுக்கு விபரீதமாக மாறியது. இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் முதலிய மேல்நாடுகளிலும், கிழக்கே அமெரிக்காவிலும் பெரிய யங்திரத் தொழில்கள் அப்பொழுது வளர்ங்தோங்கி வங்தன. அவைகளுடைய உற்பத்திப் பொருள்களே விற்று லாபம் அடையவும், மூலப் பொருள்களைப் பெறவும் நாடுகள் தேவையா யிருந்தன. நாடு பிடிக்கும் வேட்டை மும்முரமாக கடங் துவங்தது. உலகத்தோடு ஒட்டாமல், கிழக்கே தனியாக ஒதுங்கி யிருந்த நாடுகளிலும் இந்த வேட்டையின் அதிர்ச்சி ஏற்பட்டது. முதல் அதிர்ச்சியிலேயே ஜப்பான் மேல்நாட்டு உற்பத்தி முறைகளைப் படித்துப் பயன் படுத்திக் கொண்டுவிட்டது. இதல்ை சீனவுக்கு இடையூறு மேலும் அதிகமாயிற்று. மேல்நாடுகள், அமெரிக்கா ஆகியவைகளை எதிர்த்து அது சமாளித்துக் கொள்ள முடியாதபடி, ஜப்பானும் அதைச் சூழ்ந்துகொண்டது. கிழட்டு மாட்டைக் கழுகுகள் கொத்துவதுபோல், வல்லரசுகள் சீனுவைக் கொத்தித் தின்ன ஆரம்பித்தன.