பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீனுவும் வல்லரசுகளும் 53 1982-இலேயே ஜப்பான் சீனவின்மேல் படை யெடுத்து விட்டது. இந்த உண்மையை மற்ற வல்லரசுகள் இரண்டு வருஷ காலமாக ஒப்புக் கொள்ளாமல் மழுப்பிவந்தன. பின் அவைகளின் தலைகளிலேயே அடி விழுங்ததும், சீன-ஜப்பான் யுத்தம் உலக யுத்தத்தோடு ஒன்றிவிட்டது. யுத்தத் திற்கு முன்பே ஜப்பான், ஜெர்மனி இத்தாலி ஆகிய 'அச்சுகாடுகளில் ஒன்ருகக் கூடி விட்டது. பின்னல் சீன நேச தேசங்களில் ஒன்ருகச் சேர்ந்தது. ஐரோப்பாவில் என்னென்ன நேர்ந்தாலும், கிழக்கே ஜப்பானுக்குப் பதில் சொல்லாமல் இந்த மகாயுத்தம் முடிவடைய முடியாது. இவ்வளவு முக்கிய ஸ்தா னத்தை ஜப்பான் அடைந்துவிட்ட காரணத்தைக் கவனிப்போம். ஜப்பான் மேல்காட்டு யங்திரத் தொழில்களை யும் நாகரிகத்தையும் அப்படியே காப்பியடித்த" விவரம் முன் ல்ை குறிப்பிடப் பட்டிருக்கிறது. மேல் காட்டு ஏகாதிபத்திய மோகமும் அதைப் பற்றிக் கொண்டது. யங்திரத் தொழில்களின் பெருக்கமும் ஏகாதிபத்தியமும் ஒரு தாய் வயிற்றுக் குழந்தைகள். ஒன்று இருந்தால், மற்றதும் அவசியமாகிவிடும். ஆலேத் தொழில்களால் சரக்குகள் பெருவாரியாக உற்பத்தியானல், அவைகளை விற்பதற்குத் தேசங் களைப் பிடிக்கவேண்டும். பிடித்த தேசங்களைச் சுரண்டி மூலப் பொருள்களை அபகரித்துச் சென்று, ஆலேத் தொழில்களுக்கு இரை போடவேண்டும். இல்லாவிட்டால் உற்பத்தியுமில்லே, விற்பனையு மில்லை, லாபமுமில்லை. ஆகவே ஜப்பான் யந்திரத் தொழில்களே ஆரம்பித்ததும், ஏகாதிபத்தியத்திற்கு அடிகோலவும் முற்பட்டது. ஜப்பானின் ஜன நெருக்கமும் இதற்கு ஒரு காரணமாக அமைந்தது. சீனவைப் போலவே, ஜப்பானிலும் வெள்ளைக் காரர்கள் வர்த்தகம், வேதப் புத்தகம், வெடிகுண்டு