பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஸன் யாட்-லென் = 83 கோமின்டாங்’ என்ற புதிய பெயருடன் புனருத் தாரணம் செய்யப் பெற்றது. கோமின்டாங் என்ருல் ஜனங்களின் கட்சி என்று பொருள். பெயர் புதிதாக இருந்தாலும் சங்கம் ஆதிமுதல் நடந்து வங்த புரட்சிச் சங்கங்தான். இது நம்முடைய இந்திய தேசீய காங் கிரஸ் போன்றது. சீன வில் இதன் பெயர் காதிற் படாதவர் கிடையாது. நம் காங்கிரஸ் மகா சபையைப் பற்றி, 'காங்கிரஸ் என்பது இந்திய நாட்டின் கண்ணியம், கவசம், கேடையமாம்" என்று நம் தேசீயக் கவி பாடியிருப்பதுபோல் சீனர்கள் கோமின் டாங் சபையைப் பாராட்டுகிருர்கள். இரண்டாம் புரட்சியில் இளைஞர் சியாங் கேஷேக் டாக்டர் ஸ்ன்னுக்கு உதவியாக கின்ருர். பல இடங்களில் புரட்சி ஆரம்பமாகி, யுவான் ஆட்சிக்கு உலே வைக்கப்பட்டது. வடசீனுவில் அடிக்கடி கலகம் செய்து குடியரசுக்குப் பணியாதிருந்த போர் வெறி பிடித்த பிரபுக்களே அடக்குவதற்காக எவன் பலமுறை தேசியப் படைகளை அனுப்பி வைத்தார். ஆல்ை பூரண வெற்றி காணுமுன்பு அவர் நோயுற்று உடல் தளர்ந்து போனர். 1915-இல் டாக்டர் ஸன் ஷாங்காய் நகரில் தங்கி யிருந்த பொழுது, ஸ-அங் சிங்-லிங் என்ற மாது அவருடைய காரியதரிசியாக இருந்து உதவி செய்து வந்தார். டாக்டர் அவரைத் தம் இரண்டாம் மனைவி யாக விவாகம் செய்து கொண்டார். அம்மாதரசியின் சகோதரி மெய்-லிங் என்பவர்தாம் பின்னர் சியாங் கே-வுேக்கின் மனைவியாகிச் சீன ஜோதியாக விளங்கு பவர். இவர்களுடைய சரித்திரமும் குடும்ப வரலாறும் போற்றத்தக்க பெருங் கதைகள். இவர்கள். குடும்பத்தை ஸஅங்' குடும்பம் என்று சொல்லு வார்கள். சீனக் குடியரசில் இந்தக் குடும்பத்தினர்