பக்கம்:சீனத்தின் குரல்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. பி. சிற்றரசு

47


ஆகிய விதிமுறைகளைக் கொண்ட ஒரு அருமையான கல்விச் சங்கத்தை காண்டனில் Kantan சன்-யாட்.-சன் ஆரம்பித்து வைத்தார். அதன் தலைவராகவும் அவரே இருந்தார். அந்த சங்கத்தை அங்கீகரிக்க வேண்டுமென்று அன்றிருந்த மஞ்சு சர்க்காருக்கு ஒரு மனுவை அனுப்பி வைத்திருந்தார். அங்கீகாரமளிக்க மறுத்துவிட்டது சர்க்கார். இரண்டாவது முறையும் மனுவை அனுப்பி வைத்திருந்தார். அந்த முறையும் மஞ்சு மகாராணியார் அங்கீகாரம் அளிக்க முடியாதென கண்டிப்பாக மறுத்துவிட்டார்.

கல்விச் சங்கம் புரட்சி சங்கமாயிற்று

ஆரம்பிக்கப்பட்டது கல்விச்சங்கந்தான் எனினும் சர்க்காரின் சம்மதம் பெற முடியவில்லை. அதில் காணப்பட்ட திட்டங்கள் மஞ்சு சர்க்காருக்கு மரண ஓலை நீட்டியதைப் போலிருந்தது. தூது வந்த மனுவில் கண்ட திட்டங்களைத் தூக்குத் தண்டனையென நினைத்தாள் இராணியார். கல்வித் திட்டம் கலக்கத்தைக் கொடுத்தது. அதில் கண்ட திட்டப்படிப் பார்த்தால் மஞ்சு சர்க்கார் மரியாதையாக வெளியேறுவது தவிர வேறுவழியில்லாமலிருந்தது, விருந்தாளியை வீட்டினுள் தள்ளிப் பூட்டி அடுப்பில் மிளகாயைப் போட்டதுப்போல் மஞ்சு சர்க்காரின் மூக்கில் நெடியையேற்றியது இந்தத் திட்டங்கள். ஒன்று இந்த திட்டங்களை சர்க்கார் ஏற்றுக்கொள்வதானால் சிங்காதனத்தைக் காலி செய்யவேண்டும், அல்லது சிங்காதனத்தைவிட மனமில்லையானால், இந்தத் திட்டத்தைத் தயாரித்த