பக்கம்:சீனத்தின் குரல்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

சீனத்தின் குரல்


கோர வாயில் குதித்துவிட்டார் என்று 1925-ம் ஆண்டு மார்ச்சு திங்கள் பனிரெண்டாம் நாள் சீன மக்கள் அழுது புலம்பிவிட்டனர்.

சவ அடக்கம்

சாதாரணமானவரல்ல சன்- யாட்சன். இங்கிலாந்தின் சிறைச்சாலை, ஜப்பானின் மருந்துக் கிடங்கு, அமெரிக்காவின் அரசியல் தலைவர்களாயிருந்த அனைவர்க்குமே அறிமுகமானவர், உலகத்தை அவர் அறிமுகப்படுத்திக்கொள்ளவில்லை. உலகம் அவரை அறிமுகப்படுத்திக்கொள்ளவில்லை. வல்லமை பொருந்தியது என்று பெயரளவில் இருந்த மஞ்சு சர்க்கார் அவரை உலகத்துக்கு அறிமுகப்படுத்திவிட்டது. ஆகவே அவருடைய முடிவை அகில உலகத்துக்கும் ஒலிபரப்பப்பட்டது பதினெட்டு நாடுகளிலிருந்து பிரதிநிதிகள் சவ அடக்கத்துக்கா

சாசனம்

தான் சாவதற்கு முன்பு சாசனம் ஒன்று எழுதி வைத்திருந்தார் அதில் :--

"நாற்பது ஆண்டுகளாக என் நாட்டு மக்களின் புரட்சி இயக்கத்திற்காக நான் இடைவிடாமல் உழைத்து வந்திருக்கின்றேன், சீனா சுதந்திரம் பெறுவதுதான் அதன் நோக்கம். இந்த நாற்பது ஆண்டுகளில் நான் பெற்றுள்ள அனுபவத்திலிருந்து