பக்கம்:சீனத்தின் குரல்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. பி. சிற்றரசு

65


கொண்ட முடிவின் சின்னமாக 1924-ம் ஆண்டு ஜனவரி 16-ல் பம்போவா என்ற இடத்தில் ஒரு இராணுவக் கல்லூரியைக் கட்டி முடித்து அதை டாக்டர் சன்-யாட்-சன் அவர்களைக் கொண்டு திறந்து வைக்கின்றார்.

டாக்டர் சன்-யாட்-சன் கம்யூனிஸ்டுகளோடு ஒத்துழைத்தது மாத்திரமல்லாமல், சைனாவின் முதல் சோவியத் தூதுவரான காரகான் என்பவபரிடத்திலிருந்தும், சைனைவைத் திருத்துவதற்கென்றே ரஷ்யாவில் இருந்து அழைத்து வரப்பட்ட Borodin போரோடின் என்பவரிடத்திலிருந்தும் பல யோசனைகளைத் தெரிந்துகொண்டு, இவர்கள் மூலமாகவே ரஷ்யாவிடமிருந்து பல உதவிகளைப்பெற்று கொமிங்டாங் அரசரங்கத்தை வலுப்படுத்திக் கொண்டார்கள். அந்த பொன் னானக் காட்சியைக் கண்ணால் காணும் வரையிலும் சன்-யாட்-சன் உயிரோடிருந்தார்.

நால்வர்

டாக்டர் சன்-யாட்-சன்னுக்குப் பிறகு சின அரசியல் வானில் ஒளிவிட்ட நட்சத்திரங்கள் Shian-ke-Shaik; Koo-Kan-min, Liyavo-Sunka. Wan-Ching-Vail, - சியாங்-கே-ஷேக், கூ-கான்-மின், லியாவோ-சுங்கா, வான்-சிங்-வெய்ல், ஆகிய நால்வர்தான். இவர்களில் சியாங்-கே-ஷேக்கைத் தலைவராகத் தேர்ந்தெடுத்தார்கள். இந்த நேரத்தில் சீனத்தின் எல்லாப் பகுதிகளிலும் சீனா சீனர்-