பக்கம்:சீனத்தின் குரல்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. பி. சிற்றரசு

73


எண்ணம் குடிகொண்டிருக்குமோ, பொது எதிரி ஜப்பான் நாட்டை நாசமாக்கிக் கொண்டிருக்கும், போது உள்நாட்டு கட்சியின் மேல் சியாங் ஆத்திரம். கொள்வானேன். முதலில் விரட்ட வேண்டியவன் ஜப்பான்காரனா, கம்யூனிஸ்டா என்பதை மிகத் தீவிரமாக சிந்தித்தார்கள். அந்த சிந்தனையில் முதன்மையானவர் சாங்-சியூ-லியாங் என்பவர். கம்யூனிஸ்டு கட்சியின் வரலாற்றையும், பழையகால வேலை முறைகளையும் ஆழ்ந்து யோசித்தார். அதற்காக கம்யூனிஸ்டு தலைவர்களையும் சந்தித்துப் பேசினார்.

இந்த நிலமைகளுக்குப் பிறகு சியாங்கின் தளபதிகள் அனைவரும் ஒன்றுகூடி ஒரு பயங்கரமான முடிவுக்கு வந்தார்கள். அந்த முடிவுதான் தங்கள் தலைவனாகிய சியாங்கைக் கைது செய்வது என்பது. சியாங்கை உள்ளே தள்ளிவிட்டால் நாட்டின் நிலமை சரிபடலாம் என்று நினைத்தார்கள். அவனை வெளியே விட்டுவைத்திருக்கும்வரை ஒருவித தெளிவும் ஏற்படப்போவதில்லையென உறுதியாக நம்பினார்கள். கைதுசெய்து விடுவதென்று ஒருமுகமாக எல்லா தளபதிகளும் 1936-ம் ஆண்டு டிசம்பர் திங்கள் 11-ம் நாள் முடிவுக்கு வந்துவிட்டார்கள்.

அதிசயச் சம்பவம்

இந்த சம்பவம் வரலாற்றிலேயே மிக அதிசயமானது. ஏனெனில் காட்டிய பக்கம் துப்பாக்கிகளை ஏந்திச் செல்லவேண்டிய இராணுவத்தினர் கட்டளை