பக்கம்:சீனத்தின் குரல்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. பி. சிற்றரசு

83


யர் ஆதிக்கமும், வெளிநாட்டார் சுரண்டல் பேராசைக்கொள்கையும் தலையெடுக்க ஒட்டாமல் தகர்ந்து விட்டது. ஐக்கிய அமெரிக்காவின் ஆதிக்கத்துக்கப்பால் சென்றுவிட்டது. இனி சீனத்தை நல்வழிபடுத்துவதென்பது இயலாத காரியம். "அளவுகடந்த செல்வத்தையும் ஆயுதத்தையும் அளித்தோம், ஆயினும் அவைகள் மக்கள் கொக்கரிப்புக்கு முன் சூரியனைக்கண்ட பனியென விலகியது. இனி சீனத்தை நம்பி பயனில்லை, சியாங்-கே-ஷேக்கை ஊக்கிவிட்டதென்பது வெட்டிவேலையும் வீண் பொருள் நஷ்டமுமாகும்" என்று அமெரிக்க அரசாங்கச் செயலாளர் டீன் ஆக்கீசன் அவர்களால் ஐக்கிய அமெரிக்க குடியரசுத் தலைவர் ட்ரூமன் அவர்களுக்கு எழுதியாய் விட்டது.


"புதுயுகங் காண, நவசீனத்தைக் கட்ட, புரட்சி தோன்றிய இந்த நாள் சீனத்தின் மறுமலர்ச்சியை மாலைகளோடு அழைக்கிறது. மக்கள் வாழ்க்கை, மக்கள் ஜனநாயகம், மக்களின் நாட்டுப்பற்று இவைகளே நமது தாயகத்தின் சிகரத்தில் ஜொலிக்க வேண்டிய மணிகள் என்று விடாது சொல்லி வந்த என் கணவர் சன்யாட்சன் அவர்களின் கனவு நினைவாகும் நாள் உதயம் கண்டுவிட்டது. இருள் ஒழிந்து எங்கும் ஒளிமயம் தொடங்கிவிட்டது.

பீரங்கியின் பக்கத்தில் நின்றோர் இன்று உயிர் தப்ப சுரங்கக் கதவுகளை அபயக்குரலால் தட்டுகின்றனர். இனி வரும் உலகம் உறங்காது விழிப்படையு