பக்கம்:சீனம் தரும் சிந்தனைகள்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97 சென்யட்சன் தலைமையிலுள்ள கூட்டணி லீக்கில்' சேர்ந்தாள். 1906இல் சீன மாணவர்களை விரட்டி யடித்த யப்பான் அரசாங்கத்தை எதிர்த்துத் தாய்நாடு திரும்பினாள். அவள் சாங்ஹையில் (சீன மாதர்) என்ற பத்திரிக்கையை நடத்திப் பெண்ணுடைய உரிமையை வென்றெடுக்க புரட்சியைப் பிரச்சாரம் செய்தாள். 1907இல் அவள் செளசியிங்குக்குத் திரும்பினாள். அங்கு தா டுங் பள்ளிக்கூடத்துக்குத் தலைமை வகித்தாள். இந்தப் பள்ளிக்கூடத்தைப் பயன்படுத்தி, ஜின்குவா, லென் சி ஆகிய இடங்களிலுள்ள கட்சிகளுடன் தொடர்பு வைத்து *மறுமலர்ச்சிப் படை' ஒன்றை ஸ்தாபித்து, அன் ஹியூ செளகியாங் ஆகிய மாநிலங்களில் கிளர்ச்சியை எழுப்பத் தயாரிப்புச் செய்தாள். 1907 ஜூலை மாதத்திலே இக் கிளர்ச்சித் தோல்வியடைந்தது. சிங் வம்ச அரசு அன்ஹியூ மாநிலத்துக்கும் செங்கியாங் மாநிலத்துக்குமிடையிலுள்ள ரகசியமான தொடர்பைக் கண்டுபிடித்துப் படைகளை (துருப்புகளை) அனுப்பி தாடுங் பள்ளிக்கூடத்தைச் சுற்றி வளைத்துச் சியூசின்னைக் கைதுசெய்தது. சிறையில் அடைக்கப்பட்டபோது அவள் அடிபணியாமலிருந்து உறுதி யாக போராட்டம் நடத்தினாள். 1907 ஜூலை மாதத் தின் 15 ஆம் தேதியன்று அவள் செளசியிங் நகரத்தின் (Xuandingkow) வாசலில் கொலை செய்யப்பட்டாள். முப்பத்தொன்பது வயதே வாழ்ந்த பெருங்கவிஞர் பாரதியாரின் நூற்றாண்டு விழாக் கொண்டாடப்படும் இந்த நேரத்தில் இருபத்தொன்பதாம் வயதிலேயே தம் புரட்சிப் பணிகளுக்காக நடுவிதியில் தலைவேறு உடல் வேறாக வெட்டப்பட்ட வீரக் கவிதைகளும் கட்டுரைகளும் எழுதிய வீர எழுத்தாளர் சியூசினைப் பற்றிய இந்த விவரங்கள் வெளிவருவது அவருக்கும் தமிழ் மக்களுக்கும் பெருமை தருவதாகும். காரணம் தமிழ் இலக்கிய வாலாற்றில் கண்கூடான உலகப் பார்வை படைத்த முதல்வர் பாரதியார் தான். அத்துடன் முதல்முதலாகச் சீன இலக்கியத்தைத் தமிழ் இலக்கிய உலகத்திற்குத் தந்த தலைவரும் அவர்தான்.