பக்கம்:சீனம் தரும் சிந்தனைகள்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. கதேயின் காதலி கிழக்கு ஜெர்மனியில் உள்ள வைமார் என்ற இடத்தில் நடைபெற்ற கல்வி பற்றிய கருத்தரங்கில் கலந்து கொள்ளவும், மூன்று வாரக் கல்விச் சுற்றுலா செய்யவும் இந்தியா, நேபாளம், ஜோர்டன், பிலிப்பைன்ஸ், பூரீலங்கா கானா ஆகிய நாடுகளிலிருந்து அழைக்கப்பட்ட 18 கல்வி யாள்ர்களுள் ஒருவனாக நான் சென்றிருந்தேன். இந்தியா விலிருந்து ஆறு பேர் சென்றோம். அவர்களுள் நானொரு வன்தான் தென்னிந்தியன்- தமிழன், சென்ற மே மாதம் 29-ம்தேதி டெல்லியிலிருந்து காலை 10 மணிக்கு விமானம் மூலம் மாஸ்கோவுக்குப் பயணமா னோம். ஆறு மணிநேரப் பயணத்திற்குப் பிறகு மாஸ்கோ போய்ச் சேர்ந்தோம். அப்போது மாஸ்கோவில் நேரம் இரவு 8 மணி. ஆனால், மாஸ்கோ நகரமே பட்டப் பகல் போல வெளிச்சமாக இருந்தது. சூரியன் மறையவில்லை! இரவு 10.30 மணிக்கு மேல்தான் அஸ்தமனம் ஆகுமாம். இங்கு உள்ள ஒட்டல்கள், வீடுகள் ஆகியவற்றில் உள்ள ஜன்னல்களில் கறுப்புத் திரைகள் தொங்கிக் கொண்டிருப் பதைப் பார்த்தோம். மாஸ்கோ வாழ் மக்கள் இப்படித் திரைகளைப் போட்டுக் கொண்டு அறைகளை இருட் டாக்கிக் கொண்டு தூங்குகிறார்கள்! அன்றே மாஸ்கோவிலிருந்து புறப்பட்டு, இரண்டு மணி நேர விமானப் பயணத்திற்குப் பிறகு கி. பெர்லினை அடைந்தோம். இங்கும் மாஸ்கோவைப் போல் சூரியன் காலை 4மணிக்கே உதயமாகி, இரவு 10 மணிக்கு மேல்தான் மெல்ல மெல்ல மறையத் தொடங்குகிறது.