பக்கம்:சீனம் தரும் சிந்தனைகள்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 ஜெர்மன் நாடு ஒரே நாடாக இருப்பதை வல்லரசுகள் விரும்பவில்லை, கிழக்கு ஜெர்மனியும் மேற்கு ஜெர்மனியும் ஒன்றாகி விட்டால் மீண்டும் உலகப்போர் ஆரம்பமாகி விடும் என்று அமெரிக்காவும் ரஷ்யாவும் ட பப்படுவதாக கி.ஜெர்மன் மக்கள் தெரிவித்தார்கள். இ. பெர்வினிலிருந்து 300 கி.மீ. தூரத்தில் உள்ள வைமார் என்ற இடத்திற்கு வேன் ஒன்றில் சென்றோம். கிழக்கு ஜெர்மனியிலிருந்த மூன்று வாரங்களிலும் எனக்குத் தேவைப்பட்டதெல்லாம் இரண்டு வேட்டிகளும் இரண்டு சட்டைகளுமே! அந்த நாட்டில் எங்கு சென்றாலும் மிக மிகச் சுத்தமாகக் காணப்பட்டதே இதற்குக் காரணம். தெருக்களில் புழுதியே கிடையாது; எவ்வளவு நடந்தாலும் வியர்வையும் கிடையாது. அங்கே தான் சென்ற எல்லா இடங்களிலும் குடிப்ப தற்குப் பீர் மட்டுமே கொடுத்தார்கள். தண்ணிர் வேண்டும் என்று குறிப்பாகக் கேட்டால், புட்டிகளில் அடைக்கப்பட்ட மினரல் வாட்டரைத் தருகிறார்கள். இந்த நீர் குடிப்ப தற்குச் சற்று உவர்ப்பாக இருந்தது. கருந்தரங்கு மே மாதம் காலை 8.30 மணிக்கே துவங்கியது. அப்போது என் எண்ணம் நம் நாட்டை நோக்கிப் பறந்தது. இங்கு நடைபெறும் கருத்தரங்குகள் காலை 11 மணிக்குத்தான் துவங்குகின்றன. அப்போது நம்மவர் பலர் வருவதில்லை. ஆனால் அங்கோ 8.30 மணிக்குச் சற்று முன்பாகவே அரங்கு நிறைந்து விட்டது. கருத்தரங்கு ஒரு நாள் மட்டும்தான் நடைபெற்றது. அந்த நாட்டின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அறிஞர்கள் பேசினார்கள். ஜெர்மனியின் வரலாறு, சோசலிஷப் போராட்டம், இரண்டாக உடைந்த பின் கிழக்கு ஜெர்மனி யின் பொருளாதார நிலை, கல்வி மற்றும் மக்களின் வாழ்க்கை-இப்படிப் பல விஷயங்களைப் பற்றி விரிவாக