பக்கம்:சீனம் தரும் சிந்தனைகள்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

103 வும், சுவாரஸ்யமாகவும் பேசினார்கள். கருந்தரங்கு நடை பெற்ற வைமார் நமது காஞ்சிபுரம், மதுரை ஆகிய இடங் களைப் போலக் கலாச்சாரத் தலைநகரமாகத் திகழ்கிறது. உலகப் புகழ் பெற்ற மேதை 'கதே' வாழ்ந்த இடமும் வைமார்தான். கதே நம் பாரதியைப் போன்றவன். கதே. மகாகவி மட்டும்தான் என்று எண்ணியிருந்தேன். அந்த நாட்டிற்குச் சென்ற பின்தான் அவன் வைமார் குடியரசில் ஒரு மாபெரும் தலைவனாகவும் திகழ்ந்தான் என்பதைத் தெரிந்து கொண்டேன். 19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மகாகவி கதேயின் புகழ் பாடாத ஜெர்மனியனே இல்லை எனலாம். கதே பிரதமராக இருந்தபோது, அவனுக்கு ஒரு காதலியும் உண்டு. வீன் என்ற அந்தப் பேரழகி மிகப் பெரும் செல்வக் குடும்பத்தைச் சேர்ந்தவள். அரச குடும்பத் தோடு தொடர்பு கொண்டவள். அவள் கணவன் படைத் தலைவனாகப் பணியாற்றி வந்தான். வrனைக் காண்பதற்காகவே அந்த மகா கவிஞன் தினமும் குதிரையில் நீண்ட தூரம் சென்று வருவானாம். இவ்வளவு பெரும் புலவனாகத் திகழ்ந்த கதே, சாவைக் கண்டு மிகவும் அஞ்சினான். தானும் ஒருநாள் சாகப் போகிறோம் என்பதை அவன் நினைத்துப் பார்க்கவே. பயந்து நடுங்குவானாம். அவனுடைய காதலி ஷீன் இதை நன்கு அறிந்திருந் தாள். அதே இறப்பதற்கு ஏழாண்டுகளுக்கு முன்பே iன் காலமாகி விட்டாள். தன் அந்திம காலம் நெருங்கி விட்டது என்பதை அறிந்த வீன், ஒரு நீண்ட உயிலைத் தயார் செய்தாள்

  • எனது முடிவு .ெ ந ரு ங் கி விட்டது. நான் இறந்ததும் எனது உடல் அடக்கம் செய்யப்பட