பக்கம்:சீனம் தரும் சிந்தனைகள்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 வேண்டிய இடுகாட்டுக்குப் போகும் வழியில்தான் எனது அன்பிற்குரிய கதேயின் வீடும் உள்ளது. நான் சவமாகச் செல்வதைக் காண கதே ஒரு போதும் விரும்பமாட்டார். அந்தக் காட்சியை அவரால் தாங்க முடியாது. சாவைக் கண்டால் அஞ்சி நடுங்கும் கதேயை மேலும் கலங்க விடாதீர்கள். என் உடலை இடுகாட்டிற்கு வேறு ஏதாவது வழியில் எடுத்துச் செல்லுங்கள். கதே சற்று நிம்மதியாக இருக் கட்டும்!" -இப்போதும் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டிருக்கும் இந்த உயிலைப் படித்துப் பார்த்தபோது, என் கண்களில் நீர் வழிந்தது. மிகப் பெரும் அறிஞராகப் போற்றப்பட்ட ஷில்லரும் இங்கு வாழ்ந்தவர்தான், ஷில்லரும் கதேயும் சம காலத்த வர்கள். நெருங்கிய நண்பர்கள். ஷில்லரின் கல்லறைக்கு மிக அருகிலேயே தமது உடல் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்று விரும்பினார் கதே. சாவு கூட வில்லரிட மிருந்து தம்மைப் பிரித்து விடக்கூடாது என்று நினைத்தார் போலும்! கதேயின் விருப்பப்படியே அவர் இறந்த பின்பு வில்லரின் கல்லறைக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டார் வில்லர்-கதே கல்லறைக்குத் தினமும் ஆயிரக்கணக்கானவர் வருகிறார்கள்; அஞ்சலி செலுத்துகிறார்கள்.