பக்கம்:சீனம் தரும் சிந்தனைகள்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 பீர் பட்ட பாடு ஜெர்மன் நாட்டைப்பற்றி, அந்த நாட்டைச் சேர்ந்த யாரிடம் கேட்டாலும் ஒரே மாதிரியான பதிலைத்தான் கூறுகிறார்கள், பள்ளி மாணவனிலிருந்து துணைவேந்தர் வரை ஒரே மாதிரியான கருத்தைத்தான் தெரிவிக்கிறார்கள். நான் உண்மையிலேயே அதிசயித்துப் போனேன் ! ஆம்; அவர்களுடைய கல்வி முறை அவ்வளவு சிறப்பாக உள்ளது ! சமூக வாழ்வின் அடிப்படையே கல்விதான்; சரியான கல்வி இல்லாவிடில் சரியான சமுதாயம் அமை, யாது" என்பதை நன்கு உணர்ந்துள்ளார்கள். கட்டாயக் கல்வித் திட்டம் அமலில் உள்ளது, ஒன்று. முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் ஒவ்வொரு குழந்தையையும் தொடர்ந்து மிகவும் பொறுப்போடு கவனித்து வருகிறார்கள். ஒவ்வொரு மாணவனுக்கும் அல்லது மாணவிக்கும் எந்த மாதிரியான கல்வி முறையில் ஈடுபாடு உள்ளது எ ன் ப ைத க் கூர்ந்து கவனித்து அறிகிறார்கள். பள்ளிப் படிப்பு முடிந்த பின்பு அளிக்கப்படும் சான் றிதழில் இதைப் பற்றி விவரமாகக் குறிப்பிடுகிறார்கள். இதை அடிப்படையாக வைத்துக் கொண்டுதான் ஒரு மாணவன் இன்ஜினியராக வேண்டுமா, டாக்டராக வேண்டுமா என்று முடிவு செய்து, அந்தந்தக் கல்லூரிகளில் இடம் தருகிறார்கள். 3208-7