பக்கம்:சீனம் தரும் சிந்தனைகள்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 அது மட்டுமல்ல; அந்த நாட்டின் தேவைகள் என்ன என்பதை முதலிலேயே திட்டமிடுகிறார்கள். அதாவது ஒவ்வோர் ஆண்டும், நாட்டின் முன்னேற்றத்திற்கு எவ்வளவு இன்ஜினியர்கள் தேவை : மருத்துவத் துறையில் பணியாற்ற எவ்வளவு டாக்டர்கள் தேவை.இப்படிப் பல்வேறு துறைகளுக்கான தேவைகளை நன்கு ஆராய்ந்து அதற்கேற்றாற்போல் வல்லுநர்களைத் த யாரா க்கு கிறார்கள். இதற்காகும் எல்லாச் செலவுகளையும் அரசாங்கமே ஏற்றுக்கொள்கிறது. இங்கு ஒரு சுவையான நிகழ்ச்சியைக் கூற விரும்பு கிறேன். உாக்டர் குண்டர்ட் என்பவர், கருத்தரங்கில் அந்நாட்டு வெளிநாட்டுக் கொள்கை பற்றி உரையாற்றி னார். 55 வயதான அவருக்குத் திருமண வயதில் ஒரு பெண் இருந்தாள். டாக்டர் குண்டர்ட் எங்களுடன் கி. பெர்லினுக்கு வந்திருந்தார். எங்களது குழுவில் இருந்த பலர் கி. பெர்லி னில் பல பொருட்களை வாங்கினார்கள். நான் சில புத்தகங்களை மட்டும் வாங்கினேன். விமானத்தில் பயணம் செய்யும்போது ஒரு குறிப்பிட்ட எடைக்குள்ளாகவே பொருட்களை எடுத்துச் செல்ல முடியும். அதிகமான பொருட்களை வாங்கியவர்கள் இதற்காக அதிகக் கட்டணம் செலுத்த வேண்டி வந்தது. என் அருகில் நின்று கொண்டிருந்த டாக்டர் குண்டர்ட், என் பெட்டியைத் தூக்கிப் பார்த்துவிட்டு, "மிஸ்டர் சஞ்சீவி, நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. உங்கள் பெட்டியின் எடை மிகவும் சரியாகவே இருக்கிறது: என்றார்.