பக்கம்:சீனம் தரும் சிந்தனைகள்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$07 எனக்கு வியப்பாகப் போய் விட்டது. 'அதிசயமா இருக் கிறதே ! கைகளால் தூக்கிப் பார்த்துவிட்டு, எடை சரியாக இருக்கும் என்று எப்படிக் கூறுகிறீர்கள்?' என்று கேட்டேன். டாக்டர் குண்டர்ட் என்னைப் பார்த்து, மூட்டை துரக்கிய கைகள் இது ' என்றார் புன்னகையோடு. வெளிநாட்டுக் கொள்கையைப் பற்றிய கல்வியில் உயர் கல்வி பயின்றவராயிற்றே... மூட்டை தாக்கினேன் என்கிறீர்களே ?’ என்று கேட்டு விட்டேன்.

  • யுத்தம் முடிந்த பின்பு நான் சில காலம் சாக்லெட் தொழிற்சாலையில் மூட்டை துரக்கிக் கொண்டிருந்தேன். மக்களாட்சிக் குடியரசு மலர்ந்தது. யார் வேண்டு மானாலும் என்ன வேண்டுமானாலும் படிக்கலாம் என்ற நிலை ஏற்பட்டது. இந்தக் கால கட்டத்தில்தான் எனக்கும் படிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. பகலில் வயிற்றுப் பசியைப் போக்க மூட்டை தூக்கினேன். அறிவுப் பசியைப் போக்கிக் கொள்ள மாலையில் படிக்க ஆரம் பித்தேன். வெளிநாட்டுக் கொள்கையில் டாக்டர் பட்டம் பெற்றேன் !" என்று விளக்கினார் அவர்.

அங்கு மும்மொழித் திட்டம் அமலில் உள்ளது. தாய்மொழி ஜெர்மனையும், இரண்டாம் மொழியாக ரஷ்ய மொழியையும் அனைவரும் கட்டாயமாகக் கற்றாக வேண்டும். மூன்றாவது மொழியாக ஆங்கிலத்தையோ, பிரெஞ்சு மொழியையோ அல்லது லத்தீன் மொழியையோ கற்க லாம். பெரும்பாலானவர்கள் ஆங்கில மொழியையே கற்கிறார்கள். உலக அரங்கில் ஆங்கில மொழிக்கு உள்ள முக்கியத்துவத்தை அவர்கள் நன்கு உணர்ந்துள்ளார்கள். அங்கு தொலைக்காட்சியில்கூட ஆங்கில மொழியைக் கற்றுத் தருவதைப் பார்த்தேன். அந்நாட்டில் மக்களுக்குப் படிப்பு, வேலை ஆகியவற்தை அந்த நாட்டு அரசாங்கமே நிர்ணயிக்கிறது.