பக்கம்:சீனம் தரும் சிந்தனைகள்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i சூன் - 14 சூன்-14. இந்தத் தேதியை 1953 முதல் யான் மறப்ப்தில்லை. காரணம் சிலம்புச் செல்வர் ம. பொ. சி. அவர்கள் தலைமையில் திருவரங்கத்தில் திரு. வி. க., பேராசிரியர் டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை, டாக்டர் மு. வ. முதலியோரின் அஞ்சல் வாழ்த்துடன் என் திருமணம் நடந்த நாள், அந்த நாள். பேராசிரியர் டாக்டர் தெ. பொ. மீ. நேரில் வந்து வாழ்த்தியது நாங்க்ள் செய்த பெரும் பேறு. இப்போது நம்மிடையே வாழ்ந்து கொண்டுள்ள பேராசிரியர்கள் அ. ச. ஞானசம்பந்தம், ம. ரா. போ. குருசாமி முதலியவர்களும் திருமணத்திற்கு வந்திருந்தார்கள். தமிழரசு கழகமே தமிழகத்தை வாழ் விக்கும் என்ற பெருநம்பிக்கையின் காரணமாகத் திவான் பகதூர் தி. மு. நாராயணசாமிப் பிள்ளை போன்ற பொது வாழ்வுப் புகழ் பெற்ற முதியவர்கள் திருமணத்திற்கு வந்திருந்தும், சிலம்புச் செல்வர் தலைமையில் எங்கள் கலப்புத் திருமணம் நடைபெற வேண்டும் என்ற என் பெரு விழைவு வெற்றி பெற்றதே என் திருமணத்திலும் எனக்கு இன்பம் தருவதாக அந்நாளில் இருந்தது. யான் துளுவ வேளாளர் வகுப்பு; என் துணைவியார் கம்மாளர் வகுப்பு. எங்கள் திருணத்தின்போது அவர்கள் பி. ஏ., பி.டி.; எங்கள் குடும்பத்தினும் குறைவான செல்வ வளமுடைய-ஏன் வறுமை நோக்கிய-குடும்பம்தான் : பெண் அழகு என்றும் சொல்ல முடியாது. எவரும் பெண் பற்றி எந்தப் பரிவுரையும் சொல்லவில்லை; ஆனால் என் துணைவியாரின் அன்பு என்னை ஆட்படுத்திவிட்டது.