பக்கம்:சீனம் தரும் சிந்தனைகள்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f{}3 கிழக்கு ஜெர்மனியில் மூவாயிரத்திற்கு மேற்பட்ட மொழிபெயர்ப்பாளர்கள் இருக்கிறார்கள். ஆங்கிலம், பிரெஞ்சு போன்ற பல மொழிகளில் அவ்வப்போது வரும் புதிய கலைச் சொற்களையும், புதிய கருத்துகளையும் உடனடியாக ஜெர்மன் மொழியில் பெயர்ப்பதே இவர் களது வேலை, கி. ஜெர்மனியைச் சுற்றிப் பார்க்க வரும் வெளி நாட்டுப் பயணிகளுக்கு உதவவும் இவர்கள் அனுப்பப்படு கிறார்கள். எங்களுடன் வந்த ஒரு மொழிபெயர்ப்பாளருடன் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தேன். பேச்சுவாக்கில் நான் அவரிடம், உங்களுக்குத் திருமணமாகி விட்டதா ? . என்று கேட்டேன், 'இல்லை. ஆனால்,ஒரு பெண்ணுடன் வாழ்ந்து கொண் டிருந்தேன். அவள் இப்போது என்னுடன் இல்லை. வேறு ஒருவருடன் ஓடி விட்டாள். அதற்குப் பிறகு அவளைப் பல முறை பார்த்தேன். ஆனால் பேசவில்லை. இப்போது வேறு ஒரு நல்ல பெண்ணுக்காகக் காத்திருக்கிறேன். விவாகரத்து என்பது ஜெர்மனியில் சர்வ சாதாரணம் : டைவர்ஸ் செய்வது என்பது, கடையில் சென்று ஒரு கோப்பை பீர் அருந்துவதுபோல...பீர் பட்டப்பாடுதான் !" {நம் நாட்டில் தண்ணிர் பட்டயாடு போல) என்றார் அவர் மிகவும் கூச்சத்துடன் !

இந்த நிலைக்குக் காரணம் என்ன ? என்று அவரிடம் கேட்டபோது

பெண்ணுரிமை, ஆனாலும் அதிகமாக வளர்ந்து விட்டதுதான் இதற்குக் காரணம்’ என்றார். இந்த நாட்டில் படித்த எல்லோருக்குமே வேலை கிடைக்கிறது. எனவே, அவர்கள் மற்றவர்களை நம்பி வாழத் தேவை: