பக்கம்:சீனம் தரும் சிந்தனைகள்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$30 யில்லை. இதனால்தான் விவாகரத்து எக்கச்சக்கமாக காணப்படுகிறது. எங்கள் நாட்டுக் கோர்ட்டுகளும் முடிந்தவரை தம்பதி களைச் சேர்ந்து வாழ வைக்க எல்லா முயற்சிகளையும் செய்கின்றன. பெரும்பாலான வழக்குகளில் இது முடிவ தில்லை. குழந்தைகள் தாயுடன் அனுப்பப்படுகிறார்கள். இந்த ஒரு பிரச்சினையை மட்டும்தான் எங்களால் தீர்க்க முடியவில்லை ' என்றார் அவர் மிகுந்த விருத்தத்துடன். பரிதாபமாக இருந்தது : இன்னொரு சுவையான விஷயம்-கைரேகை பார்ப் பதில் அந்த நாட்டு மக்களுக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு : இதைத் தெரிந்து கொண்டபோது, மிகவும் அதிசயித்துப் போனேன்.கடவுள் கொள்கையை மறுக்கும் ஒரு கம்யூனிஸ்ட் நாட்டிலா இப்படி ஒரு நம்பிக்கை என்று ! கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர் ஒருவரிடமும் இதைப் பற்றிக் குறிப்பிட்டேன். அவரும் இதை உண்மை என்று ஒப்புக் கொண்டார். கி. பெர்லினில் இருக்கும் டி.வி.டவர் கட்டாயம் காண வேண்டிய ஒர் இடமாகும். இரவு நேரங்களில் தூரத்தி லிருந்து பார்ப்பதற்கு வெண்பிழம்பாக மின்னுகிறது. மிக மிக உயரமாக, அற்புதமாகக் கட்டப்பட்டுள்ள இந்த டி. வி. டவர் முழுவதுமே விளக்குகளால் அலங்கரிக்கப் பட்டுள்ளது. இதன் மீது சுழலும் ஒரு ஒட்டலும் இருக்கிறது. உருண்டை வடிவத்திலுள்ள இந்த ஒட்டல், ஒரு சுற்றுச் சுற்றுவதற்கு ஒரு மணி நேரமாகிறது. இந்தச் சுழலும் ஒட்டலிலிருந்து பார்த்தால் பெர்லின் நகரம் மிகவும் பிரமாதமாகக் காட்சி தருகிறது. மேற்கு பெர்லினையும் இங்கிருந்து காணமுடிகிறது... !