பக்கம்:சீனம் தரும் சிந்தனைகள்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

器 குழந்தைகளுக்காக வந்த தீயணைப்பு எஞ்சின் கிகி மாரில் உள்ள ஆரம்பப் பள்ளிக்கூடம் ஒன்றிற்குச் சென்றிருந்தேன். இருநூறுக்கு மேற்பட்ட குழந்தைகள் பயிலும் பள்ளிக்கூடம் அது. கன்னம் குழி விழுந்து ஒட்டிப் போய், கண்கள் பஞ்சடைந்து, உடல் மெலிந்து, பரட்டைத் தலையுடன் கசங்கிய உடைகளுடன் ஏதாவது ஒரே ஒரு குழந்தையாவது காணப்படுகிறதா என்று அந்தக் குழந்தைகளிடையே தேடிப் பார்த்தேன். ஒன்றைக்கூட கண்டுபிடிக்க முடிய வில்லை. வண்ண வண்ண உடைகளோடு, கொழு கொழு’ என்று இருந்த அந்தக் குழந்தைகள் முத்துப் போன்ற வெள்ளை வெளேறென்ற பற்களோடு சிரித்துக் கொண்டும், சுறுசுறுப்பாக ஒடிக் கொண்டும், ஆனந்தமாகப் பாடிக்கொண்டும் இருந்தன. அங்கு பயிலும் குழந்தைகளுக்கு ஏட்டுக் கல்வியோடு பொது நலத்திற்குரியதான வாழ்க்கையைச் சார்ந்த கல்வியையும் கற்றுத் தருவதை நேரில் கண்டேன். நாங்கள் சென்றபோது, அந்தக் குழந்தைகளுக்குத் தீ விபத்துகளைப் பற்றியும், அதை எவ்வாறு தடுப்பது என்பதைப் பற்றியும், கற்றுக் கொடுத்துக்கொண்டிருந் தார்கள்.