பக்கம்:சீனம் தரும் சிந்தனைகள்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

111 இதற்காக ஒரு தீயணைக்கும் என்ஜினே அங்கு கொண்டு வரப்பட்டது. தீயணைப்புப் பிரிவைச் சேர்ந்த பல அதிகாரிகள் அந்தக் குழந்தைகளுக்குத் தீ விபத்து களைப் பற்றி எளிய முறையில் விளக்கினார்கள். மேலும், இதில் குழந்தைகளையும் பங்குபெறச் செப் தார்கள். ஒரு சிறிய சுவரின் மீது பல சிறிய பிளாஸ்டிக் பக்கெட்டுகள் வைக்கப்பட்டிருந்தன. அந்தக் குழந்தைகளை, அங்கு வைக்கப்பட்டிருந்த பக்கெட்டுகளை ஆளுக்கொன் றாக எடுத்துக் கொண்டு, அருகில் இருந்த குழாய்களில் இருந்து நீரை நிரப்பிக் கொண்டு இன்னொரு சுவர் மீது வீசி வீசி ஊற்றச் செய்தார்கள். குழந்தைகள் இந்த வேலையை மிகுந்த ஆர்வத்துடனும் அக்கறையுடனும் கற்றுக் கொண்டன. பிறகு, அருகில் இருந்த காற்று ஊதப் பட்ட மிகப் பெரிய படுக்கைகளில் குழந்தைகளைத் தொப் தொப்' என்று குதிக்கச் செய்தார்கள். (தீ விபத்து ஏற்பட்ட கட்டடங்களின் பல மாடிகளில் இருப்பவர்கள் பிளாட்டாரத்தில் போடப்படும் இம்மாதிரியான படுக்கை யில் குதித்துத் தப்பிப்பது வழக்கமாம்.) குழந்தைக் கல்வி முறையில் இன்னொரு கம்யூனிஸ்ட் நாடான சீனாவிற்கும் கிழக்கு ஜெர்மனிக்கும் ஒரு முக்கிய வேறுபாட்டைக் கண்டேன். இரண்டாண்டுகளுக்கு முன்பு சீனாவிற்குச் செல்லும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. சீனக் கல்விக்கூடங்களில் நான் பார்த்த அந்தக் காட்சி மிகவும் கொடுமையானது. அங்கே பள்ளிகளில் கல்வி பயிலும் குழந்தைகள் தங்கள் கைகளைப் பின்னால் கட்டிக்கொண்டு உட்கார வேண்டும். இது கட்டாயம். நான் சீனாவில் பார்த்த பல பள்ளிக் கூடங்களில் இந்த முறை அமலில் இருந்தது. இதை என்னுடன் வந்திருந்த தமிழ்நாட்டுக் கல்வி அமைச்சர் அரங்கநாயகம் அவர்களும் பார்த்தார்கள்.