பக்கம்:சீனம் தரும் சிந்தனைகள்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 42 குழந்தைகள் விஷமம் செய்யாமல் இருப்பதற்காகத் தான் இந்த ஏற்பாடாம். இப்படிப்பட்ட தேவையில்லாத கட்டுப்பாடுகள் கிழக்கு ஜெர்மன் பள்ளிகளில் காணப்பட வில்லை. கி. ஜெர்மனியில் உள்ள எல்லாப் பள்ளிகள், கல் லூகி களிலும் கூட்டுக்கல்வி முறை அமலில் உள்ளது. மாணவர் களும் மாணவிகளும் சேர்ந்தே படிக்கிறார்கள். வைமாரில் நான் பார்த்த அந்தப் பள்ளியில் ஒவ்வொரு வகுப்பறையிலும் தொலைக்காட்சிப் பெட்டிகள், இன்ன கம்ப்யூட்டர்கள் இருந்தன. நாங்கள் அந்தப் பள்ளியிலிருந்து புறப்படும் Ggirth வந்தது: அந்தப் பள்ளிக்கூடத்தைச் சேர்ந்த குழந்தைகள், ஆசிரியர்கள் அனைவரும் எங்களிடம், நாம் இந்தப் பிரிவு உபசாரத்தை ஜெர்மன் முறைப்படிக் கொண்டாடு வோம்' என்றார்கள். அவர்கள் அனைவரும் சேர்ந்து பாட ஆரம்பித்தார்கள் *Time to Part has come...”

பிரியும் நேரம் வந்து விட்டது தோழர்களே! ஆனால், எப்போதும் சந்திப்போம்!” என்பதுதான் அவர்கள் பாடிய பாடலின் பொருள்.

கடைசியாகப் பல சிறுவர்கள் அவர்களின் விலாசங் களைச் சின்னச் சின்ன காகிதங்களில் பென்சிலால் எழுதி, 'ஊருக்குச் சென்றதும் மறக்காமல் அடிக்கடி கடிதம் எழுதுங்கள்; நாங்களும் உங்களுக்குப் பதில் எழுதுகிறோம்" என்றார்கள். அந்தப் பிஞ்சு உள்ளங்களைப் பிரிய மனமே வரவில்லை...!