பக்கம்:சீனம் தரும் சிந்தனைகள்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$13 நாங்கள் பெர்வின் நகரில் தங்கியிருந்த போது, குப்தா என்ற இந்தியர் எங்களைக் காண வந்திருந்தார். மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த குப்தா, பல ஆண்டுகளுக்கு முன்பே மேற்கு ஜெர்மனியில் குடியேறியவர். மேற்கு ஜெர்மனியில் அவ்வளவாக இந்தியர்களுக்கு மரியாதை இல்லை. இந்தியர்களைக் கூலிகளைவிட மிகக் கேவலமாக நடத்தினார்கள். கி. ஜெர்மனியில் வேலை கிடைத்தது. உடனே இங்கே வந்து செட்டில் ஆகி விட்டேன். ஒரு ஜெர்மன் பெண்ணையும் திருமணம் செய்து கொண்டு நிம்மதியாக வாழ்கிறேன்' என்றார் குப்தா. திருமணம் பற்றி விசாரித்ததற்கு, 'பல ஆண்டுகளுக்கு முன்பு இங்கு வந்து கு.ே யேறியதுமே என்னைத் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாக அவள் கூறினாள். நான் அவளிடம், எங்கள் இந்திய கலாசாரமே வேறு. "ஒருவனுக்கு ஒருத்திதான் என்பதையும், விவாகரத்து என்ற வார்த்தைக்கே எங்கள் கலாசாரத்தில் இடமில்லை எனபதையும் அவளிடம் தெரிவித்தேன். அவள் தன் முடிவை மாற்றிக் கொள்ளவில்லை. தான் ஒரு முழுமையான பெங்காலிப் பெண்ணாக மாறி விடுவ தாக ஒப்புக் கொண்டாள். நானும் ஒப்புக் கொண்டேன். இப்போது எங்களுக்கு மூன்று குழந்தைகள். ஒரு மகன், இரண்டு மகள்கள். ஆனால், எங்கள் மூத்த மகன் மன நோயால் அவதியுறுகிறான்' என்றார். "குடும்பத்தோடு இந்தியாவில் குடியேறும் வாய்ப் புள்ளதா?' என்று நான் குப்தாவிடம் கேட்டேன். அவர் சிரித்துக் கொண்டே, சமன்னிக்க வேண்டும். தற்போது எனக்கு இங்கு கிடைக்கும் வசதிகளைப் போல