பக்கம்:சீனம் தரும் சிந்தனைகள்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 1 & இந்தியாவில் கிடைக்காது. என்னுடைய மகனுக்கு ஆகும் எல்லா மருத்துவ வசதிகளையும் இந்த நாட்டு அரசாங்கமே ஏற்றுக் கொள்கிறது. ஒர் உதாரணம் சொல்லுகிறேன் கேளுங்கள். நான் ஒரு முறை என் மகனுடன் மருத்துவ மனைக்குச் சென்றபோது அங்கிருந்த டாக்டர் என்னிடம், "நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?’ என்று கேட்டார். தான் வசிக்கும் இடத்தின் பெயரை அவரிடம் கூறினேன். அதற்கு அவர், அடேயப்பா அவ்வளவு தூரத்திலிருந்தா வருகிறீகள்? இங்கு வந்து போவதற்கே நிறைய செல வாகுமே? கவலைப்படாதீர்கள். அந்தச் செலவையும் அரசாங்கமே ஏற்க உங்களுக்கு உதவுகிறேன்' என்று கூறிய தோடல்லாமல், உடனடியாக அதற்கு வேண்டிய ஏற். பாடுகளைச் செய்தார். அதிலிருந்து என் வீட்டிலிருந்து அந்த மருத்துவமனைக்குச் செல்ல ஆகும் முழுச் செலவு களையும் அரசாங்கம் ஏற்றுக் கொண்டுவிட்டது!” என்றார். மனதிலை சரியில்லாத மகன் இருக்கிறானே என்ற ஒரு குறை இருந்தாலும் மற்றபடி மனைவி, குழந்தை களுடன் வசதியாகவும் நிம்மதியாகவும் வாழ்வதாகக் குறிப்பிட்டார் குப்தா. அந்த நாட்டைச் சேர்ந்த ஒவ்வொரு மனிதனும் தலமாக வாழ வேண்டும் என்பதில் அந்த நாட்டு அரசாங்கம் மிகுந்த அக்கறை காட்டி வருகிறது. அந்த நாட்டு மக்களுக்கு. மட்டுமல்லாமல், அங்கு வரும் பயணிகளுக்கும் மருத்துவ வசதிகள் இலவசமாக அளிக்கப்படுகின்றன. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுக் குணமடைந்த பின் உடனடியாக வேலைக்குப் போய் சேர வேண்டும் என்ற கட்டாயமில்லை. மருத்துமனையில் சிகிச்சை பெற்ற பின் அவரவர்கள் விருப்பப்படி ஏதாவது ஒரு விடுமுறை இல்லத்தில் தங்கி ஓய்வு எடுத்துக் கொள்ளலாம். Right to சிest and Recreate என்ற ஒர் அம்சமும் அந்த நாட்டுச் சட்டத்தில் உண்டு!