பக்கம்:சீனம் தரும் சிந்தனைகள்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 தன் அன்புக்குரியவளின் வீட்டிற்கு முதன் முதலில் வந்து அமர்ந்து எழுதிய மேஜையின் ஒர் ஒரத்தில் தன் பெயரையும் அன்றைய தேதியையும் அவரே செதுக்கி புள்ளார். (நமது மாணவர்கள் பள்ளியில் உள்ள மேஜை களில் தங்கள் பெயரைப் பிளேடினால் செதுக்குவது போல.) - வைமாரில், அந்நாட்டின் புராதனப் பெருமையை விளக்கக்கூடிய இன்னிசை நாடகங்கள் (opera) பல தியேட்டர்களில் நடைபெறுகின்றன. அந்த ஒபேராக்கள் நடைபெறும் தியேட்டர்களில் அன்று நடக்கும் கதையைப் படங்களுடன் அச்சிட்டு அழகிய புத்தகங்களாகத் தருகிறார்கள், இவை ஒரு மார்க் (சுமார் 4 ரூபாய்) முதல் 10 மார்க் வரை விற்கப்படுகின்றன. நான் இப்படிப்பட்ட ஒரு நாடகத்திற்குச் சென்றிருந் தேன். என் பக்கத்தில் ஒரு ஜெர்மன் நாட்டவர் அமர்ந் திருந்தார். அவரிடம் மெதுவாகப் பேச்சுக் கொடுத்தேன். "எங்கள் குழுவினர் அனைவருமே கிழக்கு ஜெர்மனி யைக் கண்டு களித்தோம். நீங்கள் இந்தியாவிற்கு ஒரு முறையாவது வாருங்களேன். ! என்றேன். அதற்கு அவர், நாங்கள் வெளிநாடு செல்வது என்பது முடியாத காரியம். 65 வயது ஆகும் வரை யாருமே வெளி நாடுகளுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை' என்றார் அவர் தயக்கத்துடன். "ஏன் ?' என்றேன் ஆச்சரியத்துடன். "இதை விளக்கிக் கூற நீண்ட நேரமாகும் ! ஒரே ஒரு வார்த்தையில் கூறுகிறேன்-அதுதான் எங்கள் நாட்டின் சட்டம்.. That is our law' என்றார் அந்த மனிதர்.