பக்கம்:சீனம் தரும் சிந்தனைகள்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

417 மக்கட் தொகை மிகவும் குறைவாக உள்ள அந்த நாடு களில் உள்ள அறிஞர்களும் வல்லுநர்களும் வெளிநாடு. சென்று தங்கி விடக்கூடாது என்பதற்காகத்தான் இந்த ஏற்பாடு என்பதைப் பின்னர் தெரிந்து கொண்டேன். இந்தச் சுற்றுப் பயணத்தின்போது டிரஸ்டன் மற்றும் லீப்ஸிக் நகரங்களையும் சுற்றிப் பார்த்தோம். டிரஸ்டன் அழகிய சிற்பங்களுக்கும் அற்புதமான ஒவியங்களுக்கும் பெயர் பெற்ற ஒரு நகரமாகும். இந்த நகரைப் பற்றிய ஒரு சுவையான கதையை என்னிடம் கூறினார்கள். - - 16-ம் நூற்றாண்டில் இந்த நாட்டை ஆண்ட மன்ன னுக்குச் சீன பீங்கான் சிற்பங்கள் என்றால் கொள்ளை ஆசையாம். இந்தப் போர்ஸிலின் பொம்மைகள் செய்யும் கலையைக் கற்றுக்கொள்ள ஜெர்மனியிலிருந்து பல சிற்பக் கலைஞர்களைச் சீனத்திற்கு அனுப்பினான். அந்தக் கலையைக் கற்றுக்கொண்டு நாடு திரும்பியதும், சீனத்துப் பொம்மைகள் செய்ய ஏற்ற மண் ஜெர்மனியில் எந்தப் பகுதியில் கிடைக்கும் என்பதை ஆராயத் துவங் இனார்கள். டிரஸ்டன் நகரில் அவ்வகை மண் இருப்பதைக் கண்டார்கள். முதலில் சீனப் பொம்மைகளைப் பார்த்து அப்படியே imitate செய்யுமாறு உத்திரவிட்டான். அவர்கள் செய்த அந்தப் பொம்மைகள் சீன தேசத்தில் செய்த பொம்மை களைப் போலவே இருந்தன. பிறகு சீனரிடம் கற்ற அந்தக் கலையை improve செய்யவேண்டும் எ ன் று உத்தரவிட்டான் மன்னன்,