பக்கம்:சீனம் தரும் சிந்தனைகள்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 எங்கள் வாழ்க்கைப் பயணமே ஓர் இரயில் பயணத்தில் தான் தொடங்கியது. 1952-இல் நான் காஞ்சிப் பச்சை அப்பர் கல்லூரியில் விரிவுரையாளன் ; அந்த ஆண்டில் என் பெருந்துணையோடு கலப்பு மனம் புரிந்து கொண்ட ஒரு குடும்பத்தைப் பாதுகாக்கும் முழுப் பொறுப்பை நானே மேற்கொண்டிருந்தேன் ; இளமை முதற்கொண்டே காந்தி சகாப்தத்தால் விளைந்த இ ல ட் சி ய உணர்வுதான். அதனால் திருச்சிராப்பள்ளி டவுன் இரயில் நிலையத் திலிருந்து காஞ்சிபுரத்துக்குச் செங்கற்பட்டில் இறங்கிச் செல்லாமல் நேராகச் சென்னை வந்தேன். இரயிலில் கூட்ட நெரிசல் மிகுதியாக இருந்தது. நான் 'ஆண்சிங்க” மல்லவா ? ஒரிடத்தை முண்டியடித்துப் பிடித்துக் கொண்டு அந்த இடத்தைத் தக்க வருக்குத் தரலாம் என்று தீர்மானித்தபோது என் வருங்காலத் துணைவியாரே உரியவர்களாகத் தென்பட்டார்கள். எனவே, நின்று கொண்டிருந்த அவர்கட்கு அவ்விடத்தைக் காணிக்கை யாக்கினேன் : இரவெல்லாம் நான் நின்று கொண்டே பயணம் செய்தேன்; இல்லை, தவம் செய்தேன். சென்னை சேர்ந்ததும் உதவி பெற்ற உள்ளம் என்ன செய்கிறது என்று பார்த்தேன். ஒன்றும் செய்யாமல் கழட்டிக் கொள்ளுமோ என்ற அச்சமும் கவலையும் எனக்கு இல்லாமல் இல்லை! எனவே, முற்றிலும் முயற்சியில்லாமல் ஊழை நம்பிக் கோட்டை விடக் கூடாது என்ற எண்ணத் தில்-இல்லை! திட்டத்தில், இரவு லேடி வெல்லிங்டன் கல்லூரிக்குப் போக வேண்டும் என்றீர்களே! தனியே போய் விடுவீர்களா? வழி தெரியுமா? யாரும் அழைத்துப் போக வருவார்களா? என்று எழும்பூர் இரயில் நிலை யத்தை அணுகும்போது கேட்டேன். யாருமில்லை, என்ன செய்வது என்று யோ சித் துக் கொண்டுள்ளேன்!" என்றார்கள். எனக்குக் கல்லூரியும் கல்லூரிப் பேராசிரி யைகளும் ந ன் நா. க த் தெரியும்; நான் துணைக்கு