பக்கம்:சீனம் தரும் சிந்தனைகள்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 ஒரு நல்ல கணவனுக்கு மனைவியாக இருப்பதைத்தான்... கிசின் வைமாரில் இருந்தபோது, கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றிய-உடற்பயிற்சியில் ஈடுபாடு கொண்ட-ஒரு பெண்மணியைச் சந்தித்தேன். அவருக்கு வயது முப்பது. சில ஆண்டுகளுக்கு முன்பு கிழக்கு ஜெர்மனியின் புகழ் பெற்ற உடற்பயிற்சி (ஜிம்னாஸ்டிக்ஸ்) வீராங்கனையாகத் திகழ்ந்தவர் அவர். அகில உலக உடற்பயிற்சிப் போட்டிகள் பலவற்றில் கலந்து கொண்டு பல பதக்கங்களைத் தட்டிச் சென்ற அவருக்கு விபத்து ஒன்றில் காவில் பலத்த காயம் ஏற்பட்டு, இந்த விளையாட்டுகளிலிருந்து ஓய்வு பெற வேண்டிய நிலை ஏற்பட்டது. உடனே விளையாட்டுக்கு டோட்டா காட்டி விட்டு இசை நாடகத்தையே (Opera) தொழிலாக எடுத்துக் கொண்டேன் என்றார் அவர். எப்படிப்பட்ட மாற்றம்! அவரிடம், இப்போது சொல்லுங்கள். நீங்கள் வாழ்க்கையில் பெருமையாகக் கருதுவது விளையாட் டையா? நாடகத்தையா? என்று கேட்டதற்கு திச்சய மாக இந்த இரண்டுமே இல்லை. ஒரு நல்ல கணவனுக்கு மனைவியாக ருப்பதைத்தான்!' என்று சிரித்துக் கொண்டே பதிலளித்தார் அந்தப் பெண்மணி. அவருடைய கணவரும் ஒரு விளையாட்டு வீரர். மோட்டார் சைக்கிள் பந்தயங்களில் பிரமாதப்படுத்து