பக்கம்:சீனம் தரும் சிந்தனைகள்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 கிறார். என் மீது அவர் உயிரையே வைத்திருக்கிறார். எனக்கென்று அவர் இருக்கிறார் என்பதை எண்ணிப் பார்க்கும் போது நான் உண்மையிலேயே பெருமைப் படுகிறேன்!” என்றார்.

  • உங்களுக்கு எத்தனை குழந்தைகள்?" என்று அவரிடம் கேட்டபோது, அதற்கு இன்னமும் நேரம் இருக் &pg|... “There is still time for it” argårpstrf geologum's 1

பாசம் மிக்க ஒரு நல்ல குடும்பத்தைச் சேர்ந்த அந்தப் பெண்ணைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். ஒலிம்பிக்ஸ் விளையாட்டுகளில் கிழக்கு ஜெர்மன் நாடு கலந்து கொள்ளாதது பற்றி ஒரு விளையாட்டு வீரரிடம் விசாரித்தேன். விளையாட்டு என்பது மிகவும் முக்கியம் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. ஆனால் அதைவிட எங்கள் தேசத்தின் சுயமரியாதைதான் முக்கியம் என்று நினைக்கிறேன். ஒலிம்பிக்ஸ் விளையாட்டையே ஒரு வியாபாரமாக்கி விட்டது அமெரிக்கா. ஒலிம்பிக்ஸ் விளையாட்டுகளில் முதலில் தூக்கிச் செல்லப்படும் ஜோதி யைக்கூடக் காண்ட்ராக்டுக்கு விட்டிருப்பதாகத்தெரிகிறது" என்று குறை கூறினார் அவர். தங்கள் நாடு ரஷ்யாவைப் பின்பற்றி ஒலிம்பிக்ஸ்ஸைப் புறக்கணித்திருந்தாலும் விட்டுக் கொடுக்காமல் பேசினார் அவர்! கடவுள் கொள்கையை மறுக்கும் கம்யூனிஸ்ட் நாட்டில் மாதா கோயில்களின் மணி ஓசை ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது. பழைய கோயில்களைப் புதுப்பிக்கிறார்கள். புதிய தேவாலயங்களைக் கட்டித் தருகிறார்கள். பிரசாரத்திற்கு அனுமதி கிடையாது என்றாலும் அந்த நாட்டில் தனி மனிதனின் மத சுதந்திரத்தில் அரசு ஒருபோதும் தலையிடு வதில்லை,