பக்கம்:சீனம் தரும் சிந்தனைகள்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

121 ஆனால், ஒரு சில விஷயங்களைப் பற்றி மிகவும் எச்சரிக்கையாக இருக்கிறார்கள் என்பதையும் கவனித்தேன். "மந்திரிகள் வீடு எங்கே இருக்கிறது? அவர்கள் Movements". இவையெல்லாம் மிகவும் ரகசியமாக வைக்கப்படுகின்றன. அந்த நாட்டில் மந்திரிகளாக இருந்தாலும் சரி, அல்லது சாதாரண குடிமகனாக இருந்தாலும் சரி, எல்லோரும் காம்ரேடுகள்தான்! மாண்புமிகு” என்ற சொல்லுக்கு அவர்கள் அகராதியில் இடமே கிடையாது. கிழக்கு ஜெர்மனியில் உள்ள பெண்கள் தங்கள் குழந்தைகளைக் கைகளில் துரக்கிக் கொண்டு செல்வதை ஒர் இடத்திலும் என்னால் காண முடியவில்லை. குழந்தைகளை அழகிய தள்ளுவண்டிகளில் உட்கார வைத்து மெதுவாகத் தள்ளிக் கொண்டு செல்கிறார்கள். கடைகளுக்குச் சென்று பொருட்களை வாங்கும் போது குழந்தைகளைத் தங்களுடன் எடுத்துச் செல்வதில்லை. அந்தந்தக் கடைகளின் வாசல்களிலேயே தள்ளுவண்டியில் குழந்தையை உட்கார வைத்து விட்டு உள்ளே சென்று விடுகிறார்கள். ஊல்லி என்ற பெண்ணுடன் பேசும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. எங்களுடன் வந்த மொழிபெயர்ப்பாளர்களில் ஊல்லியும் ஒருவர். ostdösöäé5 F.<rah). 19. (Extra Sensory Perception} யில் அபார நம்பிக்கை உண்டு. இதைப் பற்றி அவர் என்னிடம் கூறினார். 'என் அத்தைக்கு எதிர்காலத்தைப் பற்றிக் கூறும் சக்தி உண்டு. என் மகன் மார்ட்டின் பிறக்கும் போது மிகவும் கஷ்டத்திற்குள்ளானேன். உரிய நேரத்தில் அவன் பிறக்கவில்லை. எனக்கு ஒன்றுமே புரியவில்லை. உடனே 3208.8