பக்கம்:சீனம் தரும் சிந்தனைகள்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதலாளித்துவ நாடுகளில் வேலை இல்லாத் திண்டாட்டம் தவிர்க்க முடியாத தீமை என்றே அறிஞர்கள் சொல்லுகின்றனர். அண்மையில் உலகிலேயே மிகப் பெரிய பொதுவுடைமை நாடாகிய சீனாவையும், அமெரிக்கா வையும் இங்கிலாந்தையும் ஒரே வீச்சில்-ஒரே சுற்றில் பார்த்த எனக்கு இது உண்மை என்றே தோன்றுகிறது. இதற்கான அடிப்படைக் காரணம் முதலாளித்துவ நாடு களில் கட்டுப்பாட்டின் அடிப்படையிலான திட்டமிடுதல் என்பது முயற்கொம்பாக இருப்பதே ஆகும். மேற்கண்ட மெய்ப்பாடு நிலைமாற்றம் பெறும்வரை இந்தியா போன்ற குட்டி முதலாளித்துவ நாடுகளில் இளைஞர்களின் வேலை இல்லாத்திண்டாட்டம் ஒருபெரும் பிரச்சினைதான். அதுவும் சாதி, மத அடிப்படைகள் சமூக வாழ்வை அதிகமாகச் சீர்குலைக்கும் நாடு இந்தியாதான். எனவே, வேலை வாய்ப்புகள் மேலும் மேலும் உண்டு பண்ணப்படாமலும், இருக்கும் வேலை வாய்ப்புகளையும் தகுதி அடிப்படையில் பரிமாறாமல் இருப்பதும் இந்த நாட்டின்-இந்த நாட்டில் தலைவிதிதான். இந்த நிலையில் இச்சிக்கல் தீர சில சிந்தனைகளைச் சிந்திப்பதே இச்சிறு கட்டுரையின் நோக்கம். முதலாவதாக, புதிய புதிய வேலைவாய்ப்புகளை எங்கெங்கே எப்படி எப்படி என்ன என்னவாக உண்டு பண்ணலாம் என்று அகலமாகவும் ஆழமாகவும் துணிவாக வும் துல்லியமாகவும் ஆராயும் அமைப்புகள் பல அடுக்கு களிலும் ஏற்படவேண்டும். இப்பொழுதெல்லாம் தெளி