பக்கம்:சீனம் தரும் சிந்தனைகள்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

426 வாகத் தெரியும் ஒரு சிக்கல் வேலைவாய்ப்புகள் இருக்கு மிடங்களிலும் அவ்வாய்ப்புகளை நிறைவு செய்யும் நிதி நிலைமை இல்லை என்று கைவிரிக்கப்படுகிறது. இதுதான் முதலாளித்துவ அமைப்பிலிருக்கும் வளர்ச்சிக்கான முட்டுக் கட்டை; இதை நினைக்கும் பொழுது பல அமைப்புகளில் வேலை இல்லாமல்-போதுமான வேலை இல்லாமல் பலர் சம்பளம் வாங்கிக் கொண்டிருப்பதும் ஒப்புநோக்கத் தக்கது. இதனினும் இருபெரும் கொடுமைகள் முதலாளிகள் திர்வாகிகள் இயக்குநர்கள் என்ற பெயரால் நாட்டில் ஒருவருக்குக் கொடுக்கப்படும் குறைந்த சம்பளத்திற்கு ஒரு கிறிதும் தொடர்பில்லாதவகையில் பலநூறு மடங்கு தண்ட சம்பளங்களும் மதிப்பூதியங்களும் கொடுக்கப்படுதல்... மற்றொன்று ஆடம்பரச் செலவுகளைச் செய்தலும் பொருள்களையும் பணங்களையும் பாழாக்குதலும் ஆகும். இதுவும் முதலாளித்துவ அமைப்பின் பெரிய குறைபாடு களையே புலப்படுத்தும். மேற்கூறிய நிலைமையிலும் என்ன செய்வது என்பதே நம்முன் உள்ள சிக்கல். இச்சிக்கலைத் தீர்த்து வைக்கப் புதியதாகப் பூத்துள்ள ஓர் அமைப்பே All India Brotheriy Service Council எனப்படும் அனைத்திந்திய உடன்பிறப்பு உதவி மன்றம் பல்வேறு துறைகளிலுமுள்ள பெருமக்களின் அறிவுரைகளையும் ஆதரவுகளையும் வேலை இல்லா இளைஞர்களுக்கு ஒருமுகப்படுத்தி வழங்குதலே இம்மன்றத் தின் குறியும் நெறியும் ஆகும். எனவே முதலில் வேண்டற். பாலது இம்மன்றத்தைப் பற்றிய விரிவான,விளம்பரம்தான். அடுத்துத் தேவைப்படுவது இம்மன்றத்திற்கு இன்றியமை யாத பொருளாதார பலம். இதன் துணைக்கொண்டுதான் இக்கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்டது போல வேலை வாய்ப்புகளுக்கான துல்லிய விவரங்களைத் தொகுக்க முடியும். அந்த வேலைவாய்ப்புகளை நிரப்பு வதற்கான நிதியுதவிகளைப் பற்றி உரியவர்களுக்கு ஆலோசனைகள் கூறமுடியும். மூன்றாவதாக, தன்முயற்சி